என் மலர்
புதுச்சேரி

பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பா.ஜனதா நிர்வாகிகளுடன் கண்டுகளித்தார்.
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பங்கேற்பு
- ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
- குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன் குமார் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு களித்தார்.
புதுச்சேரி ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஊசுடு தொகுதி
எம்.எல்.ஏ.வும், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன் குமார் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு களித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சாய்.ஜெ. சரவணன்குமார் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் காலை உணவு சாப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன், துணைத் தலைவர் முரளி, நிர்வாகிகள் ஏழுமலை, மீனா, தொகுதி மகளிர் அணி தலைவி லட்சுமி, கணபதி பா.ஜனதா தொகுதி பட்டியலின அணி தலைவர் சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூடப்பாக்கம் பா.ஜனதா கிளை தலைவர் முரளி, பாலு, ஜெகன், சதீஷ், ஆனந்த் ஆகியோரை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.






