என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.35 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
    X

    பத்துக்கண்ணில் போர்வெல் அமைக்கும் பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.35 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

    • அமைச்சர் சாய்‌‌.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
    • குடிநீர் நீர் தேக்க தொட்டி பொறுப்பாளர் பாலு மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக் குட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் கூடப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் வணிக வளாகங்கள் தொழிற்சாலை களும் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் குடிநீர் தேவை அதிகம் உள்ளது.

    தற்போதைய குடிநீர் குழாய்கள் மூலம் போதுமான குடிநீர் பொதுமக்களுக்கு இருந்தாலும், எதிர் வரும் காலத்தில் குடி தண்ணீர் பற்றாக்குறை போக்கும் விதமாக ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடம் அருகே புதிய போர்வெல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

    ரூ.35.29 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை போர்வெல் அமைக்கும் பணியை ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளர் திரு வேங்கடம், உதவி பொறியாளர், பீனா ராணி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் சாய்.தியாகராஜன், கட்சி நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள், குடிநீர் நீர் தேக்க தொட்டி பொறுப்பாளர் பாலு மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×