search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.1¼ கோடியில் பாலம் அமைக்கும் பணி
    X

    தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி. அருகில் அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளனர்.

    ரூ.1¼ கோடியில் பாலம் அமைக்கும் பணி

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • ரூ. 3 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாகூர் கொம்யூன் சோரியாங் குப்பம், குருவிநத்தம் கிராமத்துக்கு சுடுகாடுக்கு செல்ல தென்பெண்ணை யாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 32 லட்சத்தில் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ, பொதுப்பணித் துறை தலைமை பொறி யாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறி யாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் முதல் ஆதிங்கப்பட்டு வரை உள்ள சாலை, பிள்ளையார் குப்பத்திலிருந்து பின்னாச்சி குப்பம் வழியாக பாகூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

    இதனால் போக்குவ ரத்துக்கு சிரமமாக இருந்தது. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ தொடர்ந்து வற்புறுத்தலின் பேரில் 2 முக்கிய சாலைக்கு நபார்டு வங்கியின் கடன் மூலம் ரூ. 3 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் சந்திர குமார், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×