என் மலர்
புதுச்சேரி

விழாவில் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கல்விப்பரிசு வழங்கிய போது எடுத்தபடம்.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
- நாடார் சமுதாய மாணவ-மாணவி களுக்கு கல்விப்பரிசு வழங்கும் விழா சித்தன்குடியில் உள்ள டி.எஸ்.கே. அண்ணா மலை நாடார் வளாகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2022-23-ம் கல்வி
யாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப் பெண் வாங்கிய நாடார் சமுதாய மாணவ-மாணவி ளுக்கு கல்விப்பரிசு வழங்கும் விழா சித்தன்குடியில் உள்ள டி.எஸ்.கே. அண்ணா மலை நாடார் வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு புதுச்சேரி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ராஜசேகரன் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து நாடார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஜான்குமார் எம்.எல்.ஏ., நாடார் மகாஜன சங்க மதுரை இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் அவனிமாடசாமி நாடார், பவர் சோப் நிறுவன மேலாண் இயக்குனர் தனபால் நாடார், பொன்வண்டு சோப் மேலாண் இயக்குனர் சரவணன் நாடார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
கல்வி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் கல்வி கண் திறந்த காமராஜர் தான். அடிப்படை கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அவர் விரும்பினார். புதுச்சேரி அரசு பெருந் தலைவர் காமராஜர் பெயரில் கல்வி, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்
களை செயல்படுத்தி வருகிறது. கல்வி ஒவ்வொருவரின் வாழ்வின் உயர்வுக்கு முக்கியமானது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பொருளாளர் பழனிவேல் நாடார் வரவேற்றார். விழாவை தாமோதரன் நாடார் தொகுத்து வழங்கினார். இதில் தொழிலதிபர்கள் பாஸ்கரன், கணேஷ், அண்ணா மலை பிரபு மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அவைத்தலைவர் ராமபாண்டி நாடார் நன்றி கூறினார்.






