என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    என்.ஆர்.ஐ. இடங்களை நிரப்புவதில் வெளிப்படை தன்மை இல்லை - வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    என்.ஆர்.ஐ. இடங்களை நிரப்புவதில் வெளிப்படை தன்மை இல்லை - வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

    • காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காததே காரணம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மாணவர் சேர்க்கை தொடங்காததற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காததே காரணம்.

    புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது.ஆனாலும் ஏன் இதுவரை உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு அனுமதி தரப்படவில்லை?

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என மத்திய அரசு நினைக்கிறதா? இது குறித்து முதல் -அமைச்சர் ரங்கசாமிதான் மத்திய அரசை கேட்டு புதுவை மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். கலந்தாய்வை தாமதப்படுத்த, தாமதப்படுத்த பல குளறுபடிகள் உருவாகும்.

    அரசுப்பள்ளி மாணவ ர்கள் மீது தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோபம் ஏற்படும். இதனை அரசு உணர்ந்து விரைந்து மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை தொடங்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் என்.ஆர்.ஐ. இடங்களை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்கள் குறித்த விவரங்களையும், அவர்களுக்கான கட்டண விவரங்களையும் முழுமை யாக புதுவை அரசும், சுகாதாரத்தறையும் வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.

    Next Story
    ×