என் மலர்
புதுச்சேரி

மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்களை புஸ்ஸி ஆனந்து வழங்கிய காட்சி.
மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள்
- கோட்டக்குப்பம் 23-வது வார்டு பகுதியில் விஜய் மக்கள் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
- பொதுமக்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி ஆகிய வற்றை புஸ்ஸி ஆனந்து வழங்கினார்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சின்ன கோட்டக்குப்பம் 23-வது வார்டு பகுதியில் விஜய் மக்கள் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்ஸி ஆனந்து கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் 100 பெண்களுக்கு சேலை, 30 தூய்மை பணியாளர் களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி ஆகிய வற்றை புஸ்ஸி ஆனந்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க விழுப்புரம் மாவட்ட பொருப்பாளரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி, விழுப்புரம் மாவட்ட தலைவர் மோகன், விழுப்புரம் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் சக்திவேல் விழுப்புரம் மாவட்ட துணைத்தலைவர் வடிவேல் மற்றும் விழுப்புரம் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க கோட்ட குப்ப நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான முகமது கவுஸ் மற்றும் நிரஞ்சன், முரளி, சுந்தர், சந்துரு, பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.






