என் மலர்
புதுச்சேரி

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த அமைச்சர் சந்திரபிரியங்கா மாணவர்களுக்கு கையேடு வழங்கினார். அருகில் கலெக்டர் குலோத்துங்கன் உள்ளார்.
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பயிற்சி வகுப்பு
- அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்
- மாணவர்களுக்கு பயிற்சி தொடர்பான கையேடுகளை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.
புதுச்சேரி:
மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தேசியக் கல்வி வழிகாட்டுதல் சேவை மையம் மற்றும் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து, தொழிலாளர் நலன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பயிற்சி தொடர்பான கையேடுகளை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.
இதில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன்,
என்.சி.எஸ்.சி. ஒருங்கி ணைப்பாளர் கோட்டூர்சாமி, கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






