search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அம்மன் கோவில் குளத்தை தூய்மை செய்த நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள்
    X

    தூய்மை செய்த நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் கொம்யூன் ஆணையர் தொடங்கி வைத்த காட்சி.

    அம்மன் கோவில் குளத்தை தூய்மை செய்த நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள்

    • கொம்யூன் ஆணையர் தொடங்கி வைத்தர்
    • அரியாங்குப்பம் கம்யூன் பஞ்சாயத்து பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம் ,ஏரி ,இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 9-வது வாரமாக அரியாங்குப்பம் மனவெளியில் உள்ள கன்னி அம்மன் கோவில் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் கலந்துகொண்டு தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றரை டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வழிநடத்தினார்.

    இளநிலை பொறியாளர் அகிலன் மற்றும் குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்திகேயன் அரியாங்குப்பம் கம்யூன் பஞ்சாயத்து பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

    பள்ளியின் ஆசிரியர் விரிவுரையாளர் நெடுஞ்செழியன் , உடன் இருந்தார்.

    நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி செய்திருந்தார்.

    Next Story
    ×