search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து முடிவு எடுக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து முடிவு எடுக்க வேண்டும்

    • அ.தி.மு.க.வலியுறுத்தல்
    • சென்டாக் கவுன்சிலை நடத்த கவர்னர், முதல்-அமைச்சரும் இணைந்து முடிவெடுத்து அதிகார பூர்வமான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் முடிவை எடப்பாடி பழனிச்சாமியை பின்பற்றி புதுவை மாநில அ.தி.மு.க.வும் வரவேற்கிறது.

    மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதல்-அமைச்சரும், கவர்னரும் 2 மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க இன்னும் சுமார் 40 தினங்கள் உள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்று சென்டாக் கவுன்சிலை நடத்த கவர்னர், முதல்-அமைச்சரும் இணைந்து முடிவெடுத்து அதிகார பூர்வமான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

    அகில இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, உள்ளிட்ட தேசிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து 3-வது கூட்டத்தை கூட்டியு ள்ளனர். இந்த கூட்டம் அரசியல் லாபத்திற்காக மட்டுமே கூட்டப்பட்டது. இதில் இந்தியா வளர்ச்சி குறித்து எதுவும் பேசப்பட வில்லை.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார். பேட்டியின் போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணைச்செயலாளர் திரு நாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் நாகமணி, புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×