search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆசிரியர் தினத்தையொட்டி கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
    X

    கோப்பு படம்.

    ஆசிரியர் தினத்தையொட்டி கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

    • நல்ல குடிமக்களை உருவாக்கி சிறந்த தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது.
    • ஆசிரியர் பெருமக்களின் கடமையுணர்வையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதோடு இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் நமது கடமையாகும்.

    புதுச்சேரி:

    நாடுமுழுவதும் நாளை (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச்சர் ரங்கசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    கவர்னர் தமிழிசை:- வளரும் தலை முறையினருக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் புகட்டி சிறந்த சமுதாயத்தை உருவாக்க அர்ப் பணிப்போடு பணியாற்று பவர்கள் ஆசிரியர்கள்.

    மாணவர்களின் ஒளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழ்வதோடு நல்ல குடிமக்களை உருவாக்கி சிறந்த தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது.

    அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்த நாளில் மரியாதையும் நன்றியும் செலுத்த வேண்டியது நம்முடைய கடமை. சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி:- ஏழ்மையை போக்க உதவுவதோடு மட்டுமல்லாது, சிறந்த குடிமக்களை கொண்ட சமுதாயத்தை கட்டமைக்க உதவும் முக்கிய காரணிகளில் ஒன்றாக கல்வி உள்ளது. அந்த கல்வியை போதிப்பதோடு மட்டுமில்லாமல் ஒழுக்கம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம் ஆகிய நற் பண்புகளை ஊட்டி மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கித்தரும் உன்னத பொறுப்பை வகிப்பவர்களாக ஆசிரி யர்கள் திகழ்கின்றனர்.

    அவர்களின் பணி அறப்பணிக்கு நிகரானது. ஆசிரியர் பெருமக்களின் கடமையுணர்வையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதோடு இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் நமது கடமையாகும்.

    இளைய சமுதாயத்தை உருவாக்கி தருவதில் முக்கிய பங்காற்று பவர்களாக திகழும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். .

    Next Story
    ×