என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நலவாரியம் அமைக்க கோரி விளையாட்டு வீரர்கள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்
    X

    புதுவை சட்டசபை நோக்கி விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தினர் ஊர்வலமாக வந்த காட்சி

    நலவாரியம் அமைக்க கோரி விளையாட்டு வீரர்கள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்

    • ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து தொகுதியிலும் நவீன உள் விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும்.
    • கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளை யாட்டு வீரர்கள் நலச்சங்கத்தி னர் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர்.

    சுதேசி மில் அருகே தொடங்கிய ஊர்வலத்துக்கு சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலர் பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய வீதிக ளின் வழியாக சட்டசபை நோக்கி வந்தது. அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    விளையாட்டுத்துறைக்கு தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். இலவச உபகரணங்கள், பஸ்பாஸ், காப்பீடு வழங்க வேண்டும்.

    போதிய மைதான இடவசதி, ஆரோக்கிய உணவு வழங்க வேண்டும். தேசிய போட்டிகளில் பங்கேற்பவர்களுக்க சீருடை வழங்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை, ஓய்வூதியம், ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து தொகுதியிலும் நவீன உள் விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும்.

    கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவு விளையாட்டுக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். விளையாட்ட வீரர்கள் நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜி, செந்தில் வேல், சந்தோஷ்குமார், அசோக்குமார், பிரகதீஷ்வர், ஆறுமுகம், கணேஷ், திருநா வுக்கரசு, அன்பு நிலவன், அழகப்பன், குமரன், சந்தோஷ், சங்கர், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×