என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தியேட்டரை உடைத்து சூறையாடிய கும்பலில் ஒருவர் கைது
- தியேட்டர் உரிமையாளரிடம் பிரச்சினை செய்து விட்டு வெளியே சென்று விட்டனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்வாவை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை திருவள்ளுவர் சாலையில் சினிமா தியேட்டர் உள்ளது. அந்த தியேட்டருக்கு ரோடியர்பேட்டையை சேர்ந்த சதீஷ் மற்றும் விஷ்வா (வயது 20) ஆகியோர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு சினிமா பார்க்க வந்தனர்.
படம் பார்த்துவிட்டு செல்லும்போது லிப்டின் கதவை கீறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை திரையரங்க உரிமையாளர் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் இருவரும் படம் பார்க்க வந்துள்ளனர். உடனே உரிமையாளர் ஏன் லிப்டின் கதவை கீறிவிட்டு சென்றீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் தியேட்டர் உரிமையாளரிடம் பிரச்சினை செய்து விட்டு வெளியே சென்று விட்டனர்.
மீண்டும் சிறிது நேரத்தில் மேலும் சிலருடன் வந்த சதீஷ் மற்றும் விஷ்வா திரையங்க வாசலில் இருந்த விளம்பர பலகைகள், தியேட்டரில் இருந்த பாப்கான் கடை, பில் இயந்திரம் ஆகியவற்ைற அடித்து உடைத்து சூறையாடி விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்வாவை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் சதீஷ் உள்ளிட்ட சிலர் மீது குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.






