என் மலர்
புதுச்சேரி

கோவில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.
ஊத்து காட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- முதல் கால யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. 3-ந் தேதி , 2-ம் காலயாக பூஜை நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே பாக்கம் கிராமத்தில் உள்ள விநாயகர், முருகர், ஊத்து காட்டம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி கடந்த 1-ந் தேதி கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. 3-ந் தேதி , 2-ம் காலயாக பூஜை நடைபெற்றது.
இன்று காலை 10 மணிக்கு மேளதாளங்களுடன் யாக சாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சன்னதியில் உள்ள அனைத்து பரிவார மூர்த்திகள் மற் றும் விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இதில் கண்டமங்கலம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story






