search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை-கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி.

    புதுவை-கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    • மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் பாலம் வரை தினமும் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாக உள்ளது.
    • தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவானது.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் பாலம் வரை தினமும் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் முருங்கப்பாக்கத்தில் திரவுபதி அம்மன் கோவில் எதிரில் கடலூர் பிரதான சாலையின் ஒருபுறம் நேற்று நள்ளிரவு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சாலையின் அடியில் சென்ற பெரிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவானது.

    இதனால் நேற்று நள்ளிரவு முதல் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இன்று காலையில் நயினார்மண்டபம் கோவில் அருகே கடலூர் சாலையில் சென்ற வர்களை ஒரே புறமாக சென்று அந்த பள்ளம் விழுந்த பகுதியை கடந்த பின் இருவழிப்பாதை யாக ஏற்பாடு செய்யப்ப ட்டது. இதனால் கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இன்று காலை பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டதால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளா னார்கள்.

    மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

    போக்குவரத்து போலீசார் வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கடலூரில் இருந்து வந்த பஸ்கள், கனரக வாகனங்களை தவளக்குப்பத்தில் மறித்து அபிஷேகபாக்கம் வழியாக திருப்பி அனுப்பினர்.

    அந்த வாகனங்கள் வில்லியனூர் வழியாக புதிய பஸ்நிலையத்துக்கு செல்ல அறிவுறுத்தினர். புதுவை பஸ்நிலையத்திலிருந்து புறப்பட்ட பஸ்கள், கனரக வாகனங்கள் இந்திராகாந்தி சிலை வழியாக வில்லியனூர் சென்று தவளக்குப்பம் வழியாக கடலூர் செல்ல அறிவுறுத்தப்பட்டன.

    இருப்பினும் கார்கள், இருசக்கர வாகனங்கள் இந்த வழியில் சென்றதால் கடும் நெரிசலோடும், அவதியோடும் அப்பகுதியை கடந்து சென்றனர். இந்த நிலையில் குடிநீர் குழாயை மாற்றி சீரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று இரவுதான் இந்த பணி முடிவடையும் என தெரிகிறது. இதன்பிறகே இந்த சாலை வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதி க்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மரப்பாலம் சந்திப்பில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் அந்த பணி தற்போது முடிவடைந்து போக்குவரத்து சீராவதற்குள் முருங்கப்பாக்க த்தில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடை உள்ளதால் பொதுமக்கள் முக சுளிப்புடன் சென்றனர்.

    Next Story
    ×