search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமலோற்பவம் பள்ளியில் தூய்மை விழிப்புணர்வு  விழா
    X

    அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு பேரணி சென்ற காட்சி.

    அமலோற்பவம் பள்ளியில் தூய்மை விழிப்புணர்வு விழா

    • விழிப்புணர்வு இருவார விழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    புதுச்சேரி:

    கடந்த 1-ந் தேதி தொடங்கிய இந்தாண்டுக்கான தூய்மை விழிப்புணர்வு இருவார விழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கடந்த கொரோனா காலங்களில் மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூய்மை, துப்புரவு, முகக் கவசம் அணிதல் மற்றும் தனி மனித இடைவெளி ஆகியவற்றை வலியுறுத்தியது போல் இந்த ஆண்டும் புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியானது இவ்விழாவைச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து 'தூய்மை' உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் தூய்மை விழிப்புணர்வை ஊட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப் பட்டது.

    தொடர்ந்து பள்ளியில் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களும், 30 ஆசிரியர்களும், இவர் களுடன் நாட்டு நலப்பணித்திட்ட, தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    இப்பேரணி புதுச்சேரி வாணரப்பேட்டையில் அமைந் துள்ள அலேன் வீதி, தாமரைநகர், ஜெயராம் செட்டியார் தோட்டம், அம்பேத்கர் சாலை முதலான பிரதான வீதிகளில் நடைபெற்றது.

    இதில் பொதுமக்களிடையே தூய்மை விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் நீரை சிக் கனமாகப் பயன்படுத்தல் ஆகியவை தொடர்பான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    மேலும் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தெருமுனை நாடகமும் நிகழ்த்தப்பட்டது.

    Next Story
    ×