search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கழிவுநீர் சேகரிப்பு பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    கழிவுநீர் சேகரிப்பு பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    கழிவுநீர் சேகரிப்பு பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

    • ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கும் பணி
    • இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட தாமரை நகர், கனிபாய் தோட்டம் மற்றும் திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் பாதாள வடிகால் கழிநீர் சாலையில் வெளியேறி துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடாக இருந்து வந்தது. இதனை அறிந்த கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சங்கரிடம் முறையிட்டார்.

    இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல் , அரிகிருஷ்ணன், ஆரோக்கிய ராஜ், செல்வம், விநாயக மூர்த்தி, ராகேஷ், ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×