search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Botanical Gardens"

    • சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர்.
    • கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள்.

    ஊட்டி:

    மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சுற்றுலா வுக்கு பெயர் போன பகுதியாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு சினிமா படப்பிடிப்புகளும் நடக்கும், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ஏராளமான சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்ப டும். .சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை விழா விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தோட்டக்கலை துறையினர் செய்து வருகின்றனர்.

    கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள். சுற்றுலா பயணிகள் இடையூறின்றி வந்து செல்லவும், மலர்கள் சேதமாகாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடைவிதிக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனையடுத்து இன்று முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமியிடம் தெரிவித்து பாரத மாதா சிலை உருவாக்க சொன்னேன்.
    • செய்யப்பட்ட சிலை தோட்டக்கலை பூங்காவில் இருந்தது. கடந்த 2011-ல் தானே புயலில் இச்சிலை சேதமடைந்தது.

    புதுச்சேரி:

    புதுவை தாவரவியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட பாரத மாதா சிலையை கவர்னர் தமிழிசை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா, வேளாண் செயலர் குமார், இயக்குநர் பாலகாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    சிலையை டெரகோட்டா முனுசாமி வடி வமைத்திருந்தார்.சிலையை திறந்து வைத்த பின்பு நிருபர்களிடம் கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

    பாரதியார் பாரத மாதா சிலை உருவாக்க எண்ணினார். அதற்கான வரைப்படத்தை அவர் உருவாக்கினார். முதலில் பிரெஞ்சு கலைஞர் வரைந்த மாதா ஓவியம் பாரதியாருக்கு திருப்தி தரவில்லை. அலங்காரத்துடன் பாரத மாதா இருக்க விரும்பினார்.

    அதன்படி உருவாக்கப்பட்ட பாரத மாதாசிலை தாவரவியல் பூங்காவில் இருந்தது. தானே புயலில் இச்சிலை சேதமடைந்தது. அதையடுத்து கவர்னராக வந்தபோது பார்த்தேன். சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமியிடம் தெரிவித்து பாரத மாதா சிலை உருவாக்க சொன்னேன்.

    தற்போது ஜி-20 மாநாட்டை பாரத தேசம் தலைமைதாங்கி சிலை நடத்திக் கொண்டி ருக்கும்போது புதுவையில் பாரதமாதா சிலை நிறுவப்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் புதுவை வளர்ச்சி அடைய நாம் பாடுபட பாரதமாதா சிலை முன்பு சபதமேற்போம்.

    ஜி-20 மாநாட்டுக்கு சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமி அழைக்கப்பட்டுள்ளார். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள் ளனர். எந்த நாட்டிலும் இப்படி கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டதில்லை

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    பாரதமாதா சிலை வரலாறு தொடர்பாக வேளாண்துறையினர் வெளியிட்டுள் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

    பாரத அன்னை சிலையை உருவாக்க வவேசு அய்யருடன் பாரதியார் கலந்து ஆலோசித்தார். தலையில் தங்க கிரீடமும், இருபுறமும் விரிந்த இமயப் புருவதமும், சிந்து, கங்கை ஆறுகள் இரு மருங்கிலும் அமைய இலங்கை நாடு தாமரை மலராக நிற்கட்டும் என்று பாரத நிலப்பரப்பை உள்ளடக்கி பாரத மாதா சிலையை உருவாக்க விரும்பினார்.

    அப்போதைய பிரெஞ்சு கல்லூரி ஓவிய ஆசிரியர் பெத்ரீஸ், பாரத மாதா சிலையை உருவாக்கினார். அது பாரதியாருக்கு திருப்தி தரவில்லை. அவர் சொன்ன திருத்தங்களை செய்து வரைந்து கொடுத்தார்.பாரதியின் அன்பர்கள் இந்த ஒவியத்தை குயவர் பாளையம் வைத்தியநாத பத்தரிடம் தந்து பாரத மாதா சிலை செய்து தர கேட்டனர். அங்கு செய்யப்பட்ட சிலை தோட்டக்கலை பூங்காவில் இருந்தது. கடந்த 2011-ல் தானே புயலில் இச்சிலை சேதமடைந்தது. தற்போது மீண்டும் டெரகோட்டாவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×