என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு"

    • ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.
    • சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' எனப்படும் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ந்தேதி தொடங்கியது.

    இந்த திட்டத்தின் கீழ் ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. கியாஸ் அடுப்பு, டெபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர், முதல் சிலிண்டர் ஆகியவற்றின் செலவை மத்திய அரசு ஏற்கிறது. சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச கியாஸ் இணைப்புகளை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 10 சதவீதம் அதாவது, 2½ லட்சம் இணைப்புகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எண்ணெய் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது.

    இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிதாக இலவசமாக வழங்கப்பட உள்ள 25 லட்சம் கியாஸ் இணைப்புகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இணைப்பு என்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகம் உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கியாஸ் இணைப்புகள் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன' என்றார்.

    • வீடுகள், வணிக பயன்பாடு, தொழில்கள் மற்றும் போக்குவரத்துக்கும் கியாஸ் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    • சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் வெளிநாடுகள் மட்டுமின்றி மும்பை , டெல்லி மற்றும் தமிழகத்தில் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது.

    அதன்படி புதுச்சேரி மாநிலத்திலும் வீடுகளுக்கு குழாய் மூலமாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத்துறை புதுவை நகர எரிவாயு வினியோக கொள்கை -2023 திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்புக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இதில், புதுச்சேரி மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் ரூ.700 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேலும் வீடுகள், வணிக பயன்பாடு, தொழில்கள் மற்றும் போக்குவரத்துக்கும் கியாஸ் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசின் தலைமை செயலர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் தொழில் மற்றும் வணிகத்துறை, உள்ளாட்சி, பொதுப்பணி, மின்துறை, தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம், வருவாய், தீயணைப்பு ஆகிய துறை செயலர்களும், பிப்டிக் இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

    ×