search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய அரசின் கோட்பாட்டை புதுவை அரசு குழி தோண்டி புதைத்துவிட்டது
    X

    கோப்பு படம்.

    மத்திய அரசின் கோட்பாட்டை புதுவை அரசு குழி தோண்டி புதைத்துவிட்டது

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
    • குடும்பத்துக்கும் வேலை உறுதி அட்டை வழங்கி ஆண்டுக்கு 100 நாள் வேலை தர வேண்டும் என்பது விதி.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிராமப்புற மக்கள் அரசின் இலவசத்தை நம்பி வாழாமல் உழைப்பின் மூலம் கவுரவமாக வாழ தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2006-ல் கொண்டுவரப்பட்டது.

    புதுவை, காரைக்காலில் 108 கிராம பஞ்சாயத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    கடந்த 5 ஆண்டு புள்ளிவிபரப்படி புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது. திட்டத்தின் எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேலை உறுதி அட்டை வழங்கி ஆண்டுக்கு 100 நாள் வேலை தர வேண்டும் என்பது விதி.

    கடந்த 5 ஆண்டில் சராசரியாக ஆண்டுக்கு 20 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். இது 100 நாள் வேலை திட்டம் அல்ல, 20 நாள் வேலை திட்டம். மத்திய அரசின் உன்னத கோட்பாடை புதுவை அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் நிர்ண யிக்கப்பட்ட கூலியையும் தரவில்லை. 5 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து ரூ.ஆயிரத்து 548 கோடியை பெற்றிருக்க வேண்டும்.

    புதுவை அரசு செய்த தவறுகளால் மத்திய அரசு ரூ.112.49 கோடி மட்டும்தான் அளித்துள்ளது. இத்திட்டம் சரியான பாதையில் செயல்படுத்த உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். 108 பஞ்சாயத்திலும் திறமையான அலுவலரை நியமித்து பணிகளை பட்டியலிட்டு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×