என் மலர்
புதுச்சேரி

கிரேன் மூலம் 60 அடி மாலை
கிரேன் மூலம் 60 அடி மாலை அணிவித்த ஆதரவாளர்கள்
- அவருக்கு கிரேனில் கொண்டு வரப்பட்ட பிரமாண்ட மாலையை அணிவித்து ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- பிரம்மாண்ட மாலை அணிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:
உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அவரது ஆதரவாளர்கள் கடந்த 10 நாட்களாக பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அவருக்கு கிரேனில் கொண்டு வரப்பட்ட பிரமாண்ட மாலையை அணிவித்து ஆதர வாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
60 அடி உயரம் கொண்ட இந்த மாலை 25 தொழிலாளர்களை கொண்டு 14 மணிநேரத்தில் உருவாக்கப்பட்டது. இதற்காக ஒரு டன் பூக்கள் மற்றும் நார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதுவை வில்லியனூரில் பூக்கடையில் ரமேஷ் என்பவர் இந்த பிரமாண்ட மாலையை உருவாக்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரமாகும். அமைச்சருக்கு கிரேன் மூலம் இந்த மாலை அணிவிக்கப்பட்டது. பிரம்மாண்ட மாலை அணிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story






