என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மருத்துவ கல்லூரிகள் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க கூடாது
    X

    கோப்பு படம்.

    மருத்துவ கல்லூரிகள் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க கூடாது

    • அன்பழகன் பேட்டி
    • முதல்-அமைச்சர் தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் கடந்த ஆண்டு ரூ.3 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில அரசு ஒதுக்கீட்டில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். முதல்-அமைச்சர் தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். பிற மதத்தினர் வாக்குகளை பெற இந்துக்களை பற்றி தவறாக பேசி வருகின்றனர். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேர்மாறான ஒன்று. இந்து மதத்தில் சனா தனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசியதற்கு வேறு மதத்தை சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ. கென்னடி, இந்து மதத்தை விமர்சித்துள்ளார். அவர் இந்து மதத்தை குறைத்து பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    கென்னடி எம்.எல்.ஏ பதவியை பறிக்கக் கோரி கழக தேர்தல் ஆணை–யத்திடம் மனு கொடுக்கப்படும்.

    தி.மு.கவை சேர்ந்தவர்கள் அரசியல்ரீதியாக பேசுவது நல்லது. பிற மதத்தை பற்றி புண்படுத்தும் வகையில் பேசுவது தவறான ஒன்று. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அரசு விழா பிடிக்கவில்லை என்றால் போகக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில இணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கணேசன், மாநில கழக துணை செயலாளர் உமா, பொருளாளர் ரவி பாண்டு–ரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×