என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மது குடிப்பதற்காக கரையாம்புத்தூரில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார். அப்போது திடீரென முருகன் மயங்கி விழுந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    பாகூரை அடுத்த கரையாம்புத்தூர் அருகே தமிழக பகுதியான களிஞ்சிகுப்பம் அம்பேத்கார் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50) இவர் கடலூர் முதுநகரில் மொத்தமாக மீன் வாங்கி வந்து களிஞ்சிகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் மீன் விற்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கம் உள்ள முருகன் நேற்று காலை மீன் வியாபாரத்துக்கு செல்லாமல் மது குடிப்பதற்காக கரையாம்புத்தூரில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார். அப்போது திடீரென முருகன் மயங்கி விழுந்தார். அங்கிருந்த வர்கள் முருகனுக்கு தண்ணீர் கொடுத்து உயிரை காப்பாற்ற முயன்றும் சிறிது நேரத்தில் முருகன் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது மகன் அருண் கொடுத்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் தூய்மைப்பணியாளர்களுக்கு நடப்பாண்டில் 15 சதவீத ஊதிய உயர்வை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் புதுவைக்கு வந்தார்.

    புதுவை தலைமை செயலகத்தில் தூய்மைப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து பேசினார்.

    பின்னர் தலைமை செயலர் ராஜீவ் வர்மா, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் நெடுஞ்செழியன், கலெக்டர் வல்லவன் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

    இதின்பின் தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூய்மைப்பணியா ளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து அதிகாரி களுடன் விவாதிக்கப்பட்டது. அதன்படி புதுவையில் தூய்மைப்பணியாளர்களுக்கு நடப்பாண்டில் 15 சதவீத ஊதிய உயர்வை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் தூய்மைப் பணியாளர்களுக்கு கடனுதவி அளிக்கும் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.

    அதில் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்ததாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அப்பிரசினையை தீர்த்து கடனுதவி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கடன் பெற்றவர்களில் பல மாநிலங்களில் தூய்மைப் பணியில் ஈடுபடாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    எனவே அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தூய்மைப்பணி யாளர்களுக்கான கையுறை குறித்த புகார் வரவில்லை. கையுறை தேவையில்லை என தமிழக பகுதி தூய்மைப்பணியாளர்கள் கூறுகின்றனர்.

    ஒப்பந்த நிறுவனங்கள் தூய்மை பணியாளருக்குரிய கையுறை, சீருடைகள் வழங்காவிடில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையில் தேசிய அளவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது சுமார் 900 தூய்மைப்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் மட்டும் 225 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு புதுவையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர்களில் 18 பேருக்கு நிதியுதவி பெற்றுத்தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நேரு எம்.எல்.ஏ. ஆய்வு
    • மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு அருந்ததி நகர் திருவள்ளுவர் சாலை பகுதியில் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டை பிரிவின் மூலம் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்கால் மேல் சிமெண்ட் சிலாப் அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வரும் மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின் போது பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்டப்பிரிவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சம்பந்தம், இளநிலை பொறியாளர் கணேஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
    • இந்த நிலையில் மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நடந்தது.

    புதுச்சேரி:

    குடும்ப தலைவிகளுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழக்கப்படுகிறது. இந்த திட்டத்தினை முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

    அதனடிப்படையில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள பயனாளிகளுக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் உதவித் தொகையை வழங்கி திட்டத்தை விரிவுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நடந்தது.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பயனாளி களுக்கு ரூ.1000 உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள்,ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாராயணசாமி வலியுறுத்தல்
    • போக்குவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. போக்குவரத்து போலீசார் எந்த சிக்னலிலும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    புதுவையில் 2½ ஆண்டாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தபின் பேனர் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள்,

    எம்.எல்.ஏ.க்கள் பிறந்தநாள் விழாக்களில் புதுவையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசின் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகிறது.

    புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. இதை அமல்படுத்த வேண்டிய கலெக்டர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ஐகோர்ட்டில் ஏற்கனவே பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த தீர்ப்புள்ளது. மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு புதுவையில் காற்றில் பறக்கிறது.

    முதல்-அமைச்சரே பேனர் தடை சட்டத்தை மதிப்பதில்லை. காவல்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவுக்காக புதுவை முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தியும் எடுக்கவில்லை. பேனர்களால் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த 2 உயிர் பலிக்கு முதல்-அமைச்சர், அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர், அமைச்சர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நைனார்மண்டபத்தில் பேனரை கிழித்தார்கள் என 2 சிறுவர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

    பேனரை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. அமைச்சர் பிறந்தநாள் விழா முடிந்த வுடன் கலெக்டர் பேனர்களை அகற்ற அறிவிப்பு வெளியிடுகிறார்.

    கலெக்டர் என்ன ஜப்பானில் இருந்தாரா? அவர் புதுவையில் பேனர்களை பார்க்க வில்லையா? எந்த அரசிய ல்கட்சியாக இருந்தாலும் பேனர் வைப்பது தவறு. பேனர் வைத்தால் நடவடி க்கை எடுக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதியளித்த இடங்களை தவிர மற்ற இடங்களில் யார் பேனர் வைத்தாலும் அகற்றப்பட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர், நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மீது உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சட்டத்தை மதிக்கும் ஆட்சியாக இருந்தால் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். புதுவை மக்கள் குமுறி வருகின்றனர்.

    புதுவையில் தற்போதுள்ள அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த எந்த முக்கியத்துவமும் அளிப்பதி ல்லை. எதிர்கட்சிகள் கேள்விகேட்டால் பதில் சொல்வதில்லை. சுய விளம்பரம் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் விருப்பமாக உள்ளனர். துன்புறுத்தாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

    புதுவையில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. போக்குவரத்து போலீசார் எந்த சிக்னலிலும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை. போலீசார் கட்ட பஞ்சாயத்து செய்யும் வேலையில் உள்ளனர்.

    காவல்துறையில் எந்த புகாரையும் பதிவு செய்வதில்லை. புதுவை மாநில காவல்துறை தரம்கெட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • மாநில அரசு பங்களிப்பாக ரூ.5 கோடி வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பல்வேறு திட்டங்கள், செலவினங்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்து வருகிறார்.

    கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை புதுவை அரசு அனுப்பிய 32 கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    பிரதமரின் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைவருக்கும் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டு சந்தா ரூ.92 ¼ லட்சம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு ரூ.59. லட்சத்து 69 ஆயிரம் மானியம், ஹர்கர்திரங்கா பிரச்சாரத்துக்கு ரூ.47 லட்சம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

    சுகாதாரத்துறை பயன்பாட்டுக்கு உயர்நிலை மயக்க மருந்து பணி நிலையத்தை வாங்க ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் செலவினத்துக்கு ஒப்புதல், நிலத்தடி நீர் ஆணைய பணியிடம் உருவாக்கல், தொடக்க கூட்டுறவு மானியமாக ரூ.1 லட்சத்து 68 ஆயிரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு வட்டி மானியமாக ரூ.25 லட்சம்,கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு பங்களிப்பாக ரூ.5 கோடி வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    • மாநில செயலாளர் சலீம் கட்சியின் தேசிய குழு முடிவுகள், மாநில அரசியல் குறித்து விளக்கி பேசினார்.
    • புதுவையை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் கூட்டம் முதலியார்பேட்டை, கட்சி தலைமை அலுவ லகத்தில் நடந்தது.

    மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சலீம் கட்சியின் தேசிய குழு முடிவுகள், மாநில அரசியல் குறித்து விளக்கி பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் நாரா கலைநாதன், அந்தோணி, ரவி, அமுதா, பொருளாளர் சுப்பையா உட்பட மாநில குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    புதுவை அரசின் பத்திரப்பதிவுத்துறையை முழுமையாக சீரமைப்பு செய்ய வேண்டும். நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை அரசு சார்பு நிறுவனங்களை புனரமைப்பு செய்து, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி மித்ரா என்ற ஒருங்கிணைந்த ஜவுளி வளாக திட்டத்தில் புதுவையை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • புதுவை கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே சுனாமி நினைவு சின்னம் அமைத்துத்தரவேண்டும்

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம் மற்றும அதனை சார்ந்த மீனவ சமுதாய மக்கள் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் புதுவை கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே சுனாமி நினைவு சின்னம் அமைத்துத்தரவேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. ஏற்கனவே மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் மீன் வளத்துறை இயக்குனரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

    அதனை ஏற்று நினைவு சின்னம் அமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை நடக்க வில்லை.

    இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. மீன் வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயிலை மீண்டும் சந்தித்து சுனாமி நினைவுச்சின்னம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதனை ஏற்ற மீன்வளத்துறை இயக்குனர் சுனாமி நினைவுச்சின்னம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின் போது தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேலு சக்திவேல், அரிகிருஷ்ணன், ராஜி, விநாயகம், காலப்பன், ராகேஷ், செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கு கட்டணமாக ரூ.3 லட்சத்து 80 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், சென்டாக் மருத்துவ கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கு கட்டணமாக ரூ.3 லட்சத்து 80 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சுமார் 50 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு ள்ளதாக அறிகிறேன். இது முற்றிலும் தவறான செயலாகும். தனியார் மருத்துவகல்லூரி நிர்வாகங்களுக்கு ஆதரவாக அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கான கட்டணத்தை உயர்த்துவது ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாக அமையும்.

    ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர், பெற்றோர்களின் கருத்துக்களையும் கட்டணக்குழு தலைவர் பரிசீலனை செய்து கருணை உள்ளத்தோடு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.

    • கடந்த சில நாட்களாக திவாகர் குடல்வால் நோயால் அவதிப்பட்டு வந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் லட்சுமிநகரை சேர்ந்தவர் திவாகர் (வயது43) இவர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக திவாகர் குடல்வால் நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று திவாகர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவு மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் திவாகர் மார்புவலிப்பதாக மனைவியிடம் கூறியதால் அவரை சிகிச்சைக்காக கார்த்திகா ஸ்கூட்டியில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். சட்டசபைவாயில் அருகே வந்த போது திடீரென ஸ்கூட்டியில் இருந்து தடுமாறி இருவரும் கிழே விழுந்தனர். உடனே அங்கிருந்த சட்டசபை காவலர்கள் இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே திவாகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மனைவி கார்த்திகா கொடுத்த புகாரின் லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினை களுக்கு வைக்கப்படும் சிறிய தட்டிகள் கூட சட்டத்தைச் சொல்லி உடனே அகற்றப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பேனர் வைப்பதற்கு ஏற்கனவே விதிமுறைகளும், சட்டமும் இருந்தபோதிலும் அதனை ஆளும் கட்சி தொடர்ந்து மீறி வருகிறது.

    அதே வேளையில் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினை களுக்கு வைக்கப்படும் சிறிய தட்டிகள் கூட சட்டத்தைச் சொல்லி உடனே அகற்றப்படுகிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமும் அதிகார வர்க்கத்தின் ஆணவமுமே காரணமாக இருக்கிறது.

    அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேனர்கள் வைப்பதால் பல்வேறு பாதிப்புகளை மக்கள், சிறு வணிகர்கள் சந்தித்து வருகிறார்கள்.

    எனவே சாலையோரம் மற்றும் சாலை தடுப்பு சுவரில் பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேனர் வைப்பதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • படுகாயமடைந்த சிவா வலிதாங்காமல் அலறியபடி ஓடினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் குமார் மற்றும் அவரது உறவினரை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் சிவா (வயது 21) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் (20) மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவரும் அங்கு அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்துக்கொண்டே சென்ற சிவாவை அவர்கள் வழிமறித்து ஏன் எங்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே செல்கிறாய். என கூறி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சிவாவை குத்தினார்.

    இதில் படுகாயமடைந்த சிவா வலிதாங்காமல் அலறியபடி ஓடினார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் சஞ்சய் குமாரும் அவரது உறவினரும் தப்பி ஓடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சிவா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் குமார் மற்றும் அவரது உறவினரை தேடி வருகின்றனர்.

    ×