என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மனைவியுடன் பைக்கில் வந்தவர்  தடுமாறி விழுந்து சாவு
    X

    கோப்பு படம்.

    மனைவியுடன் பைக்கில் வந்தவர் தடுமாறி விழுந்து சாவு

    • கடந்த சில நாட்களாக திவாகர் குடல்வால் நோயால் அவதிப்பட்டு வந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் லட்சுமிநகரை சேர்ந்தவர் திவாகர் (வயது43) இவர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக திவாகர் குடல்வால் நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று திவாகர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவு மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் திவாகர் மார்புவலிப்பதாக மனைவியிடம் கூறியதால் அவரை சிகிச்சைக்காக கார்த்திகா ஸ்கூட்டியில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். சட்டசபைவாயில் அருகே வந்த போது திடீரென ஸ்கூட்டியில் இருந்து தடுமாறி இருவரும் கிழே விழுந்தனர். உடனே அங்கிருந்த சட்டசபை காவலர்கள் இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே திவாகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மனைவி கார்த்திகா கொடுத்த புகாரின் லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    Next Story
    ×