search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical education"

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கு கட்டணமாக ரூ.3 லட்சத்து 80 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், சென்டாக் மருத்துவ கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கு கட்டணமாக ரூ.3 லட்சத்து 80 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சுமார் 50 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு ள்ளதாக அறிகிறேன். இது முற்றிலும் தவறான செயலாகும். தனியார் மருத்துவகல்லூரி நிர்வாகங்களுக்கு ஆதரவாக அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கான கட்டணத்தை உயர்த்துவது ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாக அமையும்.

    ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர், பெற்றோர்களின் கருத்துக்களையும் கட்டணக்குழு தலைவர் பரிசீலனை செய்து கருணை உள்ளத்தோடு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.

    • புதுவையில் இன்றுள்ள மருத்துவக் கல்விச் சூழலில் தமிழ் வழி மருத்துவக் கல்வியோ அல்லது தமிழ் வழி மருத்துவக் கல்லூரியோ தேவையற்றது.
    • மொழியை வைத்து புதுவையில் அரசியல் செய்ய முடியாது. வாக்கு வங்கியையும் உயர்த்த முடியாது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் இன்றுள்ள மருத்துவக் கல்விச் சூழலில் தமிழ் வழி மருத்துவக் கல்வியோ அல்லது தமிழ் வழி மருத்துவக் கல்லூரியோ தேவையற்றது. இது பற்றிய கொள்கை முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டு அறிவிக்கப் படவில்லை. நலவழித்துறை அமைச்சராக இருக்கும் முதல்-அமைச்சர் இந்த ஆண்டு பட்ஜெட்டிலோ அல்லது பொது வழியிலோ இதுபற்றிக் கூறவில்லை.

    பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் தொழிற்கல்வியைக் கூட தாய்மொழியில் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியவுடன் அவர்களை திருப்திப் படுத்துவதற்காக கவர்னர் தாய்மொழி தமிழில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று கூறுகிறார். மொழியை வைத்து புதுவையில் அரசியல் செய்ய முடியாது. வாக்கு வங்கியையும் உயர்த்த முடியாது.

    புதுவையில் பொதுமக்களோ அல்லது மாணவர்களோ தமிழ் மொழியில் மருத்துவம் பயில வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை . நீட் முறை வந்ததிலிருந்து தனியார் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும் படித்தவர்கள் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்கின்றனர். அவர்கள் மருத்துவம் சார்ந்த விஞ்ஞான பாடங்கள் அனைத்தையும் சிறுவயதிலிருந்தே ஆங்கிலத்தில் கற்று வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஆங்கில பயிற்று மொழி மருத்துவக் கல்லூரியை தான் விரும்புகிறார்கள் சென்டாக் மூலமாக மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடப்பதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக பெற்றோர் மாணவர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் குற்றம் சாட்டுகிறது.

    இதுபோன்ற பிரச்சினைகளின் உண்மை தன்மையை அறிவதற்கு ஒரு குழு அமைத்துகுறைகளைப் போக்க கவர்னர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசாங்கம் எவ்வளவு இடங்களை பெற வேண்டும் என்பதில் இந்த ஆண்டும் அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவில்லை . இது சம்பந்தமாககவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுபோல தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்ட–ணங்களைப் பற்றியும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப் ப்பட்டுள்ளனவா? இவற்றை தீர்த்து வைப்பது கவர்னரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

    இப் பிரச்சினைகளை எல்லாம் தீர்ப்பதுதான் இன்றைய அவசியமே தவிர தமிழ் வழி மருத்துவக் கல்வி அல்ல. தேவைப்படின் எதிர்காலத்தில் இதைப்பற்றி முறைப்படி திட்டமிட்டு செயல்படுத்தலாம்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×