என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தூய்மை பணியாளர்கள் பெயரில் பல மாநிலங்களில் கடன் பெற்று மோசடி
புதுச்சேரி:
தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் புதுவைக்கு வந்தார்.
புதுவை தலைமை செயலகத்தில் தூய்மைப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து பேசினார்.
பின்னர் தலைமை செயலர் ராஜீவ் வர்மா, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் நெடுஞ்செழியன், கலெக்டர் வல்லவன் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.
இதின்பின் தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூய்மைப்பணியா ளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து அதிகாரி களுடன் விவாதிக்கப்பட்டது. அதன்படி புதுவையில் தூய்மைப்பணியாளர்களுக்கு நடப்பாண்டில் 15 சதவீத ஊதிய உயர்வை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில் தூய்மைப் பணியாளர்களுக்கு கடனுதவி அளிக்கும் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
அதில் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்ததாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அப்பிரசினையை தீர்த்து கடனுதவி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடன் பெற்றவர்களில் பல மாநிலங்களில் தூய்மைப் பணியில் ஈடுபடாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
எனவே அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தூய்மைப்பணி யாளர்களுக்கான கையுறை குறித்த புகார் வரவில்லை. கையுறை தேவையில்லை என தமிழக பகுதி தூய்மைப்பணியாளர்கள் கூறுகின்றனர்.
ஒப்பந்த நிறுவனங்கள் தூய்மை பணியாளருக்குரிய கையுறை, சீருடைகள் வழங்காவிடில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையில் தேசிய அளவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது சுமார் 900 தூய்மைப்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 225 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு புதுவையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர்களில் 18 பேருக்கு நிதியுதவி பெற்றுத்தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






