என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மீன் வியாபாரி மயங்கி விழுந்து சாவு
- மது குடிப்பதற்காக கரையாம்புத்தூரில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார். அப்போது திடீரென முருகன் மயங்கி விழுந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூரை அடுத்த கரையாம்புத்தூர் அருகே தமிழக பகுதியான களிஞ்சிகுப்பம் அம்பேத்கார் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50) இவர் கடலூர் முதுநகரில் மொத்தமாக மீன் வாங்கி வந்து களிஞ்சிகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் மீன் விற்கும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கம் உள்ள முருகன் நேற்று காலை மீன் வியாபாரத்துக்கு செல்லாமல் மது குடிப்பதற்காக கரையாம்புத்தூரில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார். அப்போது திடீரென முருகன் மயங்கி விழுந்தார். அங்கிருந்த வர்கள் முருகனுக்கு தண்ணீர் கொடுத்து உயிரை காப்பாற்ற முயன்றும் சிறிது நேரத்தில் முருகன் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து அவரது மகன் அருண் கொடுத்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






