என் மலர்
புதுச்சேரி

சுனாமி நினைவு சின்னம் அமைத்துத்தரவேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. மீன் வளத்துறை இயக்குனரிடம் கோரிக்கை விடுத்த காட்சி.
சுனாமி நினைவுச்சின்னம் உடனே அமைக்க வேண்டும்
- கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- புதுவை கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே சுனாமி நினைவு சின்னம் அமைத்துத்தரவேண்டும்
புதுச்சேரி:
உப்பளம் தொகுக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம் மற்றும அதனை சார்ந்த மீனவ சமுதாய மக்கள் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் புதுவை கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே சுனாமி நினைவு சின்னம் அமைத்துத்தரவேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. ஏற்கனவே மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் மீன் வளத்துறை இயக்குனரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனை ஏற்று நினைவு சின்னம் அமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை நடக்க வில்லை.
இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. மீன் வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயிலை மீண்டும் சந்தித்து சுனாமி நினைவுச்சின்னம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனை ஏற்ற மீன்வளத்துறை இயக்குனர் சுனாமி நினைவுச்சின்னம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேலு சக்திவேல், அரிகிருஷ்ணன், ராஜி, விநாயகம், காலப்பன், ராகேஷ், செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.






