என் மலர்
தேர்தல் செய்திகள்
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போதுசென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 300 பணம் இருந்தது தெரிய வந்தது.
காரை ஓட்டிவந்தவர் சென்னை திருமுக்கூர் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது36) என்பதும் இவர் கேரளாவில் வாகமான் என்ற இடத்தில் நிலம் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
ஆனால் அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அதனை கைப்பற்றிய அதிகாரிகள் ஆண்டிப்பட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
தமிழக-கேரள எல்லையில் போடி முந்தல் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரி சின்னவெளியப்பன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.40 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போடி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையின்போது கேரளாவில் இருந்து சாகுல்அமீது என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.30 லட்சத்தை பறிமுல் செய்தனர்.
கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரை ரவி என்பவர் ஓட்டி வந்தார்.
அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை கொடைக்கானலில் காய்கறிகள் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து சார்பதிவகத்தில் ஒப்படைத்தனர். #LSPolls
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
சிதம்பரம் தொகுதியில் அந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனிச்சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி திருமாவளவன் இன்று தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-
‘தனிச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தும் இந்நாள் வரை ஆணையம் சின்னத்தை ஒதுக்கவில்லை.
முதலில் மோதிரம் சின்னம் கேட்டோம். அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். பின்னர் வைரம் சின்னத்தை தெரிவித்தோம். அது கிடைக்கும் என உறுதி அளித்தார்கள்.
ஆனால் 2 நாட்கள் கழித்து அதுவும் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக கூறினார்கள். மூன்றாவதாக பலாப்பழ சின்னம் கேட்டோம். அதுவும் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்றார்கள். நான்காவதாக டேபிள் சின்னத்தை கேட்டு இருக்கிறோம். 4,5 நாட்கள் ஆகி விட்டன. இன்னும் அந்த சின்னத்தை ஒதுக்கவில்லை. இப்போது வேறொரு பட்டியலை அனுப்புங்கள் என்கின்றனர்.
இந்த நிமிடம் வரை சின்னம் ஒதுக்கப்படாததற்கு ஏதேனும் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அதனை முடிவாக சொல்ல இயலாது. ஒவ்வொரு முறையும் நான் போட்டியிடும் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.
அதனால் 2 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது நல்லது அல்ல. இனி காத்திருக்க முடியாது. குறைந்த நாட்களே உள்ளதால் தனிச்சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது சிரமமானதும் கூட. 6 சட்டப்பேரவைகளை உள்ளடக்கிய பரந்த பாராளுமன்றத் தொகுதி விழுப்புரம்.
சிதம்பரம் தொகுதியைப் போன்று விழுப்புரம் தொகுதியில் கட்சிக்கு வாக்கு வங்கி திரட்சி என்பது உறுதிப்படுத்தப்படாதது. விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் கள நிலவரம் வெவ்வேறானவை. விழுப்புரத்தில் வீம்புக்கு தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைய விருப்பமில்லை.
இன்னும் பெருவாரியான மக்களின், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் அணிதிரட்டல் அந்த தொகுதியில் இல்லை என புரிந்துகொள்ள வேண்டும். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவோ, திமுக அழுத்தம் காரணம் எனவோ எண்ண வேண்டாம்’.
இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
ரொக்கமாக பணம் கொண்டு செல்வதற்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்- பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த காவல்சேரி அருகே அரக்கோணம் தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான பறக்கும் படையிளர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70 இருந்தது. காரில் இருந்த செங்கல்பட்டை அடுத்த கொம்மனாஞ்சேரியை சேர்ந்த கண்ணனிடம் விசாரித்தபோது பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் சமர்ப்பித்து பணத்தைப்பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.
வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்திவிடலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். எனவே, மூன்று தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றியை எதிர்த்து, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேர்தல் தொடர்பான வழக்கு எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். #OttapidaramCase #HC #Krishnasamy
புதுடெல்லி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த கட்சி இரண்டு பிரிவாக செயல்பட்டது.
முதல்-அமைச்சர் இ.பி.எஸ், துணை முதல்- அமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் ஓர் அணியாகவும், சசிகலா, தினகரன் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர்.
கடந்த 2017-ல் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டுதல் குழு என புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளர்கள் வேட்புமனுவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரியும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் ‘‘அ.தி.மு. க.வின் விதிகளின்படி வேட்பாளர்களின் மனுவில் கையெழுத்திட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு மார்ச் 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆனால் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தொடங்குவதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 25-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்தது. #ADMK #DelhiCourt
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.
மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.
இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த அரியானா மாநில மந்திரி அனில் விஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரசாருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

உங்களுக்கும் தேவைப்பட்டால் ‘பப்பு’ (மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் 'ஏதுமறியாத சிறுவன்' என்பதை குறிக்கும் வகையில் சில வேளைகளில் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று குறிப்பிடுவதுண்டு) என்ற அடைமொழியை உங்கள் பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என தெரிவித்துள்ளார். #AddPappu #HaryanaMinister #Congressworkers #AnilVij #Chowkidar
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அலகாபாத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயுள்ள சீதாமர்கி என்னுமிடத்தில் சீதைக்கான கோயில் அமைந்துள்ளது.
ராமரின் வனவாச காலத்தின் பின்னர் இங்குள்ள காட்டுப்பகுதியில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதாதேவியுடன் அவர்களது மகன்களான லவன், குசன் வளரும்போது, இராமர் அனுப்பிய அசுவமேத யாகக் குதிரை சீதாமர்கி வந்தது.
அந்த குதிரை இராமருக்குரியது என்பது தெரியாமல் லவன், குசன் அதனைக் கட்டிவைத்ததாகவும், அதனை விடுவிக்க ராமர் வந்ததாகவும், அப்போது இராமருக்கும் லவன், குசன் ஆகியோருக்கும் இடையே சண்டை நடந்ததாகவும், அப்போது சீதை வெளியே வந்து இராமரிடம் பிள்ளைகளைப் பற்றிக் கூறிவிட்டு, அவர்களை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு பூமிக்குள் சென்றதாகவும் புராணங்களில் காணப்படுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் படகு மூலம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்துவரும் உத்தரப்பிரதேசம் கிழக்கு மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சீதாதேவி பூமிக்குள் ஐக்கியமான இந்த புனிததலத்தில் இன்று வழிபாடு செய்தார். #PriyankaGandhi #SitaSamahitSthal #Gangayatra
பிரயாக்ராஜ்:
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மிகவும் பலவீனமாக உள்ள இந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொறுப்பு பிரியங்காவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு இந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
முதல் கட்டமாக அவர் நேற்று உத்தரபிரதேசத்தில் கங்கையில் படகு பிரசாரத்தை தொடங்கினார். நேற்று காலை பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மனையா காட்டில் இருந்து அவர் படகு பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3 நாட்கள் படகில் சென்று நாளை வாரணாசியை சென்றடைய பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.
இந்த படகு பயணத்தின் போது ஆங்காங்கே கரையோரங்களில் உள்ள கிராம மக்களை சந்தித்து பிரசாரத்தையும் பிரியங்கா மேற்கொண்டுள்ளார். 145 கிலோ மீட்டர் தொலைவுக்கு கங்கையில் படகு பயணம் செய்யும் பிரியங்கா தினமும் மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
நேற்று மாலை அவர் சிர்சா பகுதியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடியை மிக மிக கடுமையாக தாக்கி பிரியங்கா உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
எனது படகு பயணத்தின் தொடக்கத்தின்போது எனது பாட்டி இந்திராகாந்தியின் நினைவு எனக்கு வந்தது. அவர் என்னை இந்த பகுதிக்கு பல தடவை அழைத்து வந்துள்ளார்.
அவர் மடியில் நான் இங்கு தலைவைத்து தூங்கி இருக்கிறேன். அப்போ தெல்லாம் அவர் என்னிடம், “பிரச்சினைகளை கண்டு பயப்படக்கூடாது. துணிச்சலுடன் போராட வேண்டும்” என்று கூறுவார். அந்த வழியில் நான் பயணிக்க தொடங்கி இருக்கிறேன்.
பிரதமர் மோடி தனது பெயருக்கு முன்பு காவலாளி என்று போட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரையும் அப்படி போடும்படி சொல்கிறார். அவர் யாருக்கு காவலாளியாக இருந்துள்ளார். பணக்காரர்களுக்கு மட்டுமே அவர் காவலாளி.
ஏழை விவசாயிகளுக்கு அவர் காவலாளியாக இருக்கவில்லை. நேற்று நான் சில விவசாயிகளை சந்தித்து பேச நேரிட்டது. அப்போது அவர்கள் விவசாயிகளுக்கு விவசாயிகள்தான் காவலாளி. வேறு யாரும் அல்ல என்று தெரிவித்தனர். இதை மோடி உணர்ந்து கொள்ள வேண்டும்.
உத்தரபிரதேசத்தில் வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. எந்த நலத்திட்ட பணிகளும் முறையாக நடக்கவில்லை. அனைத்து துறைகளிலும் பா.ஜனதா அரசு தோல்வி அடைந்து இருக்கிறது.
இந்த குறையை திசை திருப்பவே பிரிவினை அரசியலை அவர்கள் நடத்துகிறார்கள். ஜாதி, மதத்தை பெரிதாக காட்டி பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து மறைக்கிறார்கள். இந்த நிலைமாற வேண்டும்.
உத்தரபிரதேசத்தில் இப்போதைய நிலையை மாற்ற என்னால் முடியும். இங்குள்ள மக்களை நான் நன்கு அறிந்துள்ளேன். எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மாநிலத்தின் தலைவிதியை மாற்றலாம்.
இவ்வாறு பிரியங்கா ஆவேசமாக பேசினார். #PriyankaGandhi #IndiraGandhi #Congress
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் 1 பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிக்களும், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அ.தி.மு.க.- தி.மு.க. இரு கட்சிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் உள்ள கூட்டணி கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டிருந்தார். இதில் 24 எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
அடுத்த பட்டியலை இன்னும் 2 நாளில் டி.டி.வி. தினகரன் வெளியிட உள்ளார். இதில் 16 எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்களும், 9 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்த பட்டியலில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச் செல்வன் பெயர் இடம் பெற்றுள்ளது. #ThangaTamilSelvan #AndipattiConstituency
பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி தமிழகத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை 26 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். தினமும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பிரசாரம் செய்கிறார்.
அவர் பிரசாரம் செய்யும் ஊர்-இடங்கள் வருமாறு:-
மார்ச் 22-ந்தேதி: (வெள்ளி)- தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி, திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், தூத்துக்குடி (பொதுக்கூட்டம்), குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் (பொதுக்கூட்டம்)
23-ந்தேதி (சனி) - கோவில்பட்டி (தூத்துக்குடி தொகுதி) சாத்தூர், வெம்பக்கோட்டை, (விருதுநகர் தொகுதி) ராஜபாளையம் (பொதுக்கூட்டம்) (தென்காசி தொகுதி)
24-ந்தேதி (ஞாயிறு)- மாலை 4 மணி முதல் பேசுகின்ற இடங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் (தென்காசி தொகுதி), கல்லுபட்டி, திருமங்கலம் (விருதுநகர் தொகுதி), உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரிய குளம் (தேனி தொகுதி)
25-ந்தேதி (திங்கள்) - திருச்சி பாராளுமன்றத் தொகுதி, புதுக்கோட்டை, குளத்தூர், கீரனூர், ஸ்ரீரங்கம், திருச்சி.
26-ந்தேதி (செவ்வாய்) - வேலூர், அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதிகள்.
சென்னையில் 27-ந்தேதி (புதன்) - வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பாராளுமன்றத் தொகுதிகள்.
28-ந்தேதி (வியாழன்) - விழுப்புரம், கள்ளக்குறிச்சி பாராளுமன்றத் தொகுதிகள்.
29-ந்தேதி (வெள்ளி) - பெரம்பலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள், அரியலூர், குன்னம், பெரம்பலூர், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், டோல்கேட்.
30 மற்றும் 31-ந்தேதி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி (சனி, ஞாயிறு, திங்கள்) - ஈரோடு பாராளுமன்றத் தொகுதி.
ஏப்ரல் 2-ந்தேதி (செவ்வாய்) - ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதிகள், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், திருப்போரூர்.
3-ந்தேதி (புதன்) - புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்.
4-ந்தேதி (வியாழன்) - நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம்.
5-ந்தேதி (வெள்ளி)- தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி, தஞ்சாவூர், ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி.

7-ந்தேதி (ஞாயிறு) - மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை.
8-ந்தேதி (திங்கள் )- தேனி பாராளுமன்றத் தொகுதி உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம்.
9 மற்றும் 10-ந்தேதி - ஈரோடு பாராளுமன்றத் தொகுதி.
11-ந்தேதி (புதன்) - திருப்பூர், பொள்ளாச்சி, கோவை பாராளுமன்றத் தொகுதிகள்.
12-ந்தேதி (வியாழன்) - நீலகிரி பாராளுமன்றத் தொகுதி சத்தியமங்கலம், அன்னூர், அவினாசி, பவானி சாகர், மேட்டுப்பாளையம்.
13-ந்தேதி (வெள்ளி) - திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலக்குண்டு.
14-ந்தேதி (சனி) - தென்காசி பாராளுமன்றத் தொகுதி, கரிவலம், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி.
15-ந்தேதி (ஞாயிறு) - திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை.
16-ந்தேதி - ஈரோடு. #LSPolls #Vaiko

“தேவாலயங்கள் இயங்கக்கூடிய கிறிஸ்துவப் பள்ளிகள் அதிகமாக உள்ள நிலையில், அந்த தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும், அதேசமயம் அந்த பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் இயங்கும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிறிஸ்தவ பள்ளிகளில் செயல்படக்கூடிய வாக்குசாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால், தேர்தலை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிஷப் கவுன்சிலின் மனுவிற்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையையும் நாளைக்கு ஒத்திவைத்தார். #LSPolls #ChristianSchoolsBooths
நாம் தமிழர் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. எங்கள் கட்சியில் தான் வரலாற்று நிகழ்வாக பெண்களுக்கு சரிநிகர் சமமாக 50 சதவீத இடங்களை ஒதுக்கி கொடுத்துள்ளோம். 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

23-ந்தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நடைபெறுகிறது. 25-ந்தேதி முதல் நான் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும் அதுபோன்று கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
பா.ஜனதா கட்சி பாகிஸ்தானுடனான உறவை அரசியல் ஆக்குகிறது. இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை வைத்தும், அந்த கட்சி அரசியல் செய்கிறது.
இவ்வாறு சீமான் கூறினார். #LSPolls #Seeman






