என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 82 ஆயிரத்து 408 பேருக்கு பரிசோதனை செய்ததில் 16,513 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதில் 16,230 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,628 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,522 ஆக உயர்ந்துள்ளது.
1,997 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 3,600- க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை இருந்தது. மாவட்டத்தில் கடந்த வாரம் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியாக எந்த பகுதியும் அறிவிக்கப்படாத நிலையில் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் நோய் பாதிப்பு பற்றிய உண்மை நிலையை அறிய முடியவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவப்பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் போது முழுமையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் குருநாதன் (வயது 33). டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் மதுரைக்கு சவாரி செல்வதற்காக குருநாதன் தனது டாடா சுமோ காரில் புறப்பட்டார்.
எரிச்சநத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியானது.
இதனைத் தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குருநாதன் உடனே காரில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவரால் கார் கதவை திறக்க முடியவில்லை.
ஒருபுறம் அவர் கதவை உடைத்து திறக்க முயலும் நேரத்தில் காரில் தீ மளமளவென பரவிக் கொண்டிருந்தது.
தீ விபத்தால் பதட்டத்தில் இருந்த குருநாதன் செல்போன் மூலம் தனது தந்தை முனியாண்டியை தொடர்பு கொண்டு கார் தீ விபத்துக்குள்ளானதும், தான் உள்ளே சிக்கியிருப்பதாகவும் அலறினார்.
உடனே அவரது தந்தை முனியாண்டி ஆட்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. காருக்குள் குருநாதன் தீயில் கருகி இறந்த கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மகன் இறந்ததை கண்டு முனியாண்டி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜி பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இந்த இயக்கத்தை துடிப்போடும், பொலிவோடும் நடத்தி வருகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புலம்பி வருகிறார்.
தி.மு.க. ஆட்சியில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் இன்றைக்கு கரண்டு கட்டே இல்லை. அ.தி.மு.க. தமிழுக்காக, வாழ்கின்ற கட்சி.
தி.மு.க.வும், காங்கிரசும் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் நாங்கள் தான் தமிழ் கலாச்சாரத்தை தாங்கி பிடிக்கிற இயக்கம் என கூறுகின்றனர். இதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்த கட்சி காங்கிரஸ். அதனை மீட்ட கட்சி அ.தி.மு.க. என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
தி.மு.க. ஆட்சியை மக்கள் மறந்து விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கின்றார். தேர்தல் வரட்டும், தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அ.தி.மு.க. எழுச்சியோடு தேர்தலை எதிர்நோக்கி செல்கிறது.
தை பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் எடப்பாடியார் அலை, அ.தி.மு.க. அலை வீசுகின்றது. அ.தி.மு.க. வேட்பாளர் யாராக இருந்தாலும், இரட்டை இலை சின்னத்தில் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 80,406 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
16,219 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 16,512 ஆக உயர்ந்துள்ளது.
2,148 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. தடுப்பூசி மாவட்டத்தில் உள்ள ஏழு மையங்களிலும் நேற்று 675 பேருக்கு போடப்பட்டது கிட்டத்தட்ட திட்டமிடப்பட்டதில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதுவரை 1,544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அடுத்து வரும் நாட்களில் திட்டமிட்டபடி தினசரி 700 பேருக்கு தடுப்பூசி போடப்படும் எனஅதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் குறைந்த அளவிலேயே உள்ளது.






