என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய புது தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 35). பந்தல் தொழிலாளி. இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். இவரது தாயார் அருகே உள்ள கடைக்கு செல்லும் போது வீட்டை பூட்டி விட்டு, அதன் அருகே சாவியை வைத்துவிட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சாவியை திறந்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில்இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story






