என் மலர்
விருதுநகர்
சாத்தூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் தங்கசாமி (வயது70). இருவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டின் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜலதோஷத்துக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவாய்புரம்:
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் முகேஷ் (வயது23). தொழிலாளி.
இவருடைய மனைவி பூபாலா. இவர்களுக்கு திருமணமாகி 42 நாட்கள் தான் ஆகிறது. முகேஷ் தனது நண்பருடன் தளவாய்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். தனக்கு சளி, ஜலதோஷம் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவர், ஊசிபோடுமாறு அங்கு பணிபுரியும் செவிலியரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கையில் நரம்பு ஊசி போட்டுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் முகேஷ் வாந்தி எடுத்தார்.
உடனே செவிலியர், முகேஷ் இடுப்பில் மேலும் ஒரு ஊசி போட்டுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தளவாய்புரம் போலீசில் முகேசின் தந்தை முனியாண்டி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து, அந்த மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியரிடம் விசாரணை நடத்தி வருகிறார். முகேசின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமணமான 42 நாட்களில் புதுமாப்பிளை இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாலேஸ்வரி (வயது 82). இவர் நேற்று மதியம் பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையைபறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகி விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாத்தூரில் உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்தூர்:
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்காக வேளாண் விற்பனை துறை மூலம் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
கடந்த 2000-ம் ஆண்டு சாத்தூரில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. சாத்தூரில் நான்கு வழி சாலை அருகே ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த சந்தை செயல்பட்டு வருகிறது.
சாத்தூர்,ஏழாயிரம்பண்ணை, உப்பத்தூர், நடுவப்பட்டி, சின்னக்காமன்பட்டி, மேட்டுப்பட்டி, நென்மேனி, நாகலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை இங்கு வந்து விற்பனை செய்து வந்தனர்.
இதன்மூலம் இந்த பகுதியில் உள்ள மக்களும் பயன் பெற்று வந்தனர். நாளடைவில் இந்த உழவர்சந்தை பயன்பாடற்று போனது.
கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் சாத்தூர் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் தற்காலிகமாக உழவர்சந்தையில் செயல்பட்டன.
இவ்வாறு சில மாதங்களாக உழவர்சந்தையில் இந்த தற்காலிக கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் கடைகள் அனைத்தும் அறிஞர் அண்ணா மார்கெட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆதலால் தற்போது உழவர்சந்தை எவ்வித பயன்பாட்டின்றி பூட்டி கிடக்கிறது.
விவசாயிகளின் நலன் காக்க உருவாக்கப்பட்ட உழவர் சந்தையை முறையாக நடைமுறைப்படுத்தி, விவசாயிகளின் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மீண்டும் உழவர்சந்தையை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தூர் தேவதானம் பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தளவாய்புரம்:
சேத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். இதுபற்றி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனை அடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி நேற்று சேத்தூர், தேவதானம் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த பணியில் சென்னை வேளாண்மை இயக்குனர் கழக பிரதிநிதி தனசேகரன், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வனஜா, பிரதிநிதி பூவலிங்கம், ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா, துணை அலுவலர் விநாயகமூர்த்தி, சேத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
சிவகாசி அருகே மாணவியை கடத்தி திருமணம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
திருத்தங்கலில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த முத்தீஸ்வரன் (வயது 19) என்பவர் மதுரை மாவட்டம் பேரையூருக்கு கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து வந்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமாராணி, மாணவியை மீட்டு வாலிபர் முத்தீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
சிவகாசி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள சரஸ்வதி பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50) . இவர் டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் தனது இருச்சக்கர வாகனத்தில் சித்துராஜபுரம்-போடுரெட்டியபட்டி ரோட்டில் சென்ற முருகன் அந்த பகுதியில் உள்ள எல்லையம்மான்கோவில் அருகில் சென்ற போது நிலைதடுமாறி அந்த பகுதியில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அவரது மகன் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியின்போது கட்டிடத் தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். இவருடன் இவரது மகன் காளிராஜனும் நேற்று 5-வது மாடியில் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது கட்டிட தொழிலாளி முருகன் 5-வது மாடியின் வெளிப் பகுதியில் இருந்து திடீரென தவறி விழுந்தார். இதில் படு காயம் அடைந்த முருகனை உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூரைக்குண்டு கிராம மக்கள் இறந்த கட்டிட தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு அருணாச்சலம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை வேனில் ஏற்றி அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கட்டுமான பணி நிறுவனம் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தபோதிலும் உடனடியாக ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட் டத்தை தொடர்ந்தனர். இந்தநிலையில் விருதுநகர் எம்.எல்.ஏ. ஆர்.ஆர். சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸ் வழக்கு பதிவு செய்தால்தான் நிவாரண உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து முருகன் மகன் காளிராஜ் கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 33). இவர் மத்திய சேனையில் இருந்து வெள்ளூருக்கு மோட்டர் சைக்கிளில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த இவரது மனைவி விஜி உடனடியாக சிகிச்சைக்காக இவரை விருதுநகர்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விஜி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜபாளையம் அருகே திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் முகேஷ் (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஆயத்த ஆடை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு நேற்று மாலை 6 மணி அளவில் காய்ச்சல் என்பதால் சிகிச்சை பெறுவதற்காக தளவாய்புரத்தில் உள்ள சுகாதார கூட்டுறவு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவருக்கு ஊசி ஒத்துக்கொள்ளாமல் வாந்தி வந்துள்ளது. மேலும் ஒரு நரம்பு ஊசி போடப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அவரது உடல்நிலை மோசமானது. உடனே உறவினர்கள், நண்பர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முகேஷ் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முகேஷ் இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் ராஜபாளையம் டி.எஸ்.பி. நாகசங்கர், தெற்கு இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சேத்தூர் இன்ஸ்பெக்டர் பவுல் யேசுதாஸ் உள்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இறந்த முகேஷுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் மனைவி பூபாலா உள்பட உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தளவாய்புரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை ஊழியர்களை விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,528 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,528 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 86 ஆயிரத்து 906 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,522 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 16,238 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 53 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,528 ஆக உயர்ந்துள்ளது. 4,468 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3,590 பேரின் மருத்துவபரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் தவிர்க்கப்படவில்லை.

விருதுநகர் அருகே நிலம் வாங்கியதற்கு ரூ.1¼ கோடி போலி வரைவோலை கொடுத்து மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்:
ராஜபாளையம் அருகே உள்ள ராம்நகரை சேர்ந்தவர் சவுந்தர ராஜன். இவரது மனைவி பூங்கோதை (வயது47). இவருக்கு சொந்தமான 37 ஏக்கர் 52 சென்ட் நிலம் சேத்தூர் பகுதியில் உள்ளது. இதில் 21 ஏக்கர் 33 சென்ட் நிலத்தை ஈரோட்டை சேர்ந்த நிலதரகர் செல்வின்ராஜ் மூலம் சேலத்தை சேர்ந்த கோகிலா என்பவர் ஏக்கருக்கு ரூ.7 லட்சம் வீதம் விலை பேசி வாங்கி உள்ளார். பத்திரப்பதிவின்போது அரசு வழிகாட்டுதல் மதிப்பீட்டின் படி ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோகிலாவின் கணவர் ஜெகநாதன் ரூ.1 கோடியே 32 லட்சத்து 11 ஆயிரத்துக்கு அரியானா மாநிலத்தில் உள்ள வங்கி வரைவோலை கொடுத்துள்ளார். இந்த வரைவோலையினை சவுந்தரராஜன், வங்கி கணக்கில் போடுவதற்கு சென்றபோது அந்த வரைவோலை போலியானது என தெரியவந்தது. இதுபற்றி ஜெகந்நாதனிடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈரோட்டை சேர்ந்த நில புரோக்கர் செல்வின் ராஜ், நிலத்தை கிரையம்பெற்ற சேலத்தை சேர்ந்த கோகிலா, அவரது கணவர் ஜெகநாதன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.