search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bride groom death"

    திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    மண்ணச்சநல்லூர்:

    அரியலூர் அருகே உள்ள கீழப்பழுர் கிராமத்தை சேர்ந் தவர் மூர்த்தி (வயது 33), தொழிலாளி. இவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருச்சி சிறுகனூர் அருகே தச்சன்குறிச்சி பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். 

    நேற்றிரவு அவர் சமத்துவபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது திருச்சி-லால்குடி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் , மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். 

    இதனிடையே இன்று காலை தச்சன்குறிச்சி சமத்து வபுரம் அருகே உள்ள மது பானக்கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி -லால்குடி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும் லால்குடி தாசில்தார் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தச்சன்குறிச்சி சமத்துவபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

    ஏராளமானோர் அங்கு குவிவதால் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. மேலும் மது அருந்தி விட்டு செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    உளுந்தூர்பேட்டை அருகே நடந்து சென்ற புதுமாப்பிள்ளை மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருப்பெயர்தக்கா பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 32). இவர் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டைக்கு வந்தார். இதையடுத்து ராஜீவ் காந்திக்கும், கல்பனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் ராஜீவ்காந்தி தனது மனைவியுடன் உளுந்தூர்பேட்டையில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு கள்ளக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி அவரது மனைவி கல்பனாவுடன் சென்றார். பின்னர் கல்பனாவை கள்ளக்குறிச்சியில் விட்டுவிட்டு ராஜீவ்காந்தி மட்டும் உளுந்தூர்பேட்டைக்கு பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகர் பகுதியில் ராஜீவ் காந்தி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராஜீவ்காந்தி மீது மோதியது. இதில் ராஜீவ்காந்தி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றுவிட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். விபத்து குறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான ராஜீவ்காந்தியின் மனைவி கல்பனா கர்ப்பிணியாக உள்ளார். திருமணமான 9 மாதத்தில் ராஜீவ்காந்தி விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாடி பாலகிருஷ்ணன். அ.தி.மு.க. நிர்வாகி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்கள்.

    பாலகிருஷ்ணனின் மகன் ராஜகுரு(வயது27). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு காற்றாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சீதப்பாலை அடுத்த பூலாங்குழியைச் சேர்ந்த மெர்லின்ஷீபா(24) என்பவருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மெர்லின்ஷீபா 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். நேற்று அவரை பார்ப்பதற்காக புதுமாப்பிள்ளை ராஜகுரு மோட்டார் சைக்கிளில் பூலாங்குழி சென்றார்.

    தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே வந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுரு சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ராஜகுருவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கள் கதறி அழுதனர்.

    ராஜகுருவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டி வந்த வாலிபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரை போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரை விடுவித்து விட்டதாக தெரிகிறது. இது ராஜகுருவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இன்று அவர்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் மீண்டும் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×