என் மலர்
விருதுநகர்
விருதுநகர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று காதல் திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் 17 வயது சிறுமியை காணவில்லை என அவரது தாயார், சூலக்கரை போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 22) என்ற வாலிபர் அந்த சிறுமியை காதலித்து வந்ததாகவும், அவளை கடத்திச் சென்று பல்லடத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு விருதுநகர் கொண்டு வந்தனர். பின்னர் ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிவகாசி நகரம் முழுவதும் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை உடனே சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி:
சிவகாசி நகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது போதாத நிலையில் மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் சாலைகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பள்ளம் தோண்டி அதில் பணியாளர்கள் குழாய்களை பதித்து வருகிறார்கள்.
இதற்காக தோண்டப்பட்ட பல இடங்களில் சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி விழும் நிலை தொடர்கிறது.
இந்த நிலையில் சிவகாசி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை உடனே சீரமைக்கவில்லை என்றால் மக்களை திரட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று அக்கட்சியினர் துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறார்கள்.
இதே போல் சிவகாசி ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவகாசி எஸ்.என்.புரம்சாலை கடந்த 6 மாதங்களாக மிகவும் மோசமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் வெளியேற போதிய வசதி இல்லாத இந்த பகுதியில் மழை நீர் தெப்பகுளம் போல் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் வாருகால் அமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டனர்.
சிவகாசி அருகே மண் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணசாமி, கிராம நிர்வாக அலுவலர் உமாராணி, கிராம நிர்வாக உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் நெடுங்குளம் கண்மாய்க்கு சென்ற போது அங்கு வடப்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் ரங்கராஜன், சிந்தட்டி என்கிற அய்யாதுரை மகன் முருகன் மேலும் 2 பேர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் டிராக்டரில் மண் அள்ளியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்களை பிடிக்க முயன்ற போது வாகனத்துடன் 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். கிராவல் மண்ணுடன் பிடிப்பட்ட டிராக்டரை, கிராம நிர்வாக அலுவலர் உமாராணி எம்.புதுப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தூர் அருகே பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி நாச்சியார் (வயது38). அதே பகுதியை சேர்ந்த முருகன் (40) என்பவரின் மனைவி அனிதா. இவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனிதாவின் உறவினர்களான முருகன் (40), மாரீஸ்வரன் (27), அய்யனார் (30), ஈஸ்வரன் (20) ஆகியோர் நாச்சியாருடன் தகராறில் ஈடுபட்டு கடுமையான வார்த்தைகளால் பேசியதுடன் அவரை தாக்கி உள்ளனர்.
இதில் காயமடைந்த நாச்சியார், சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகன், மாரீஸ்வரன், அய்யனார், ஈஸ்வரன் ஆகியோரை சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் நேற்று பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 70 பவுன் நகை மற்றும் ரூ.1½லட்சம் கொள்ளை போனது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அன்பு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நாகநாதன் (வயது 46). திருச்சுழி ரோட்டில் மோட்டார் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் தி.மு.க.வில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று அருப்புக்கோட்டையில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றார். இந்தநிலையில் அவரது மூத்த மகளான கல்லூரி மாணவி சுகி (20) நேற்று மதியம் 1 மணிக்கு வெளியே சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பு மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த அவர், எட்டிப்பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சுகி, உடனே நாகநாதனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து மர்ம நபர் ஒருவர் இரும்பு ஆயுதத்துடன் வெளியே வந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டு இருந்த நபருடன் அவர் தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா ஆகியோர் நாகநாதனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டிற்குள் இருந்த 70 பவுன் நகை மற்றும் பணம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஹெல்மெட் அணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இட நெருக்கடியை சமாளிக்க சாத்தூரில் உள்ள பஸ்நிலையத்தை விரிவாக்க செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்:
சாத்தூரில் அண்ணா பவளவிழா பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த பஸ்நிலையம் அந்த காலகட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கீட்டின்படி கட்டப்பட்டது. பிறகு 1984 மற்றும் 2,000 ஆயிரம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.
ஆண்டுகளும் கடந்து விட்டன. மக்கள் தொகையும் பெருகியும் விட்டது. ஆனால் தற்போது வரை இந்த பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்படவில்லை.
இந்த பஸ்நிலையத்தில் இருந்து விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, நடுவப்பட்டி, இருக்கன்குடி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி விளாத்திகுளம், நாகலாபுரம், உப்பத்தூர், கரிசல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், வெற்றிலையூரணி, தாயில்பட்டி, ஆலங்குளம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் இந்த பஸ்நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.
பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுவதால் அதிக அளவில் பொதுமக்கள் இங்கு வருகின்றனர். அதேபோல இருக்கன்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர்.
இவ்வாறு முக்கியத்துவம் உள்ள பஸ்நிலையம் இட நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என அனைவரும் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதால் இட நெருக்கடியால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
எனவே தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கீட்டின் படி இட நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த பஸ்நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும். அவ்வாறு விரிவுபடுத்தும் போது நவீனமயமாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,540 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,540 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 16,258 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 51 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமை இடமாக கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு நேற்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இன்றும் இந்த பணி தொடர்கிறது.
இந்த கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் உடன் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பங்கேற்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களும், வன ஆர்வலர்களும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த முறை வனத்துறை ஊழியர்கள் மட்டும் தங்களுக்கு உரிய பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிவகாசி அருகெ முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட எரிச்சந்த்தம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 70). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி லட்சுமி இறந்துவிட்டார். இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வந்த தனது மகன் ரவிச்சந்திரன் குடும்பத்தினருடன், முனியாண்டி வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 21- ந்தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக் கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெம்பக்கோட்டை அணையில் சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி:
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி வரும் வைப்பாற்றின் குறுக்கே காயல்குடி ஆறு கலக்கும் இடத்தில் விவசாயத்திற்காக எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் வெம்பக்கோட்டை அணை கட்டப்பட்டது.
இந்த அணையில் உள்ள உபரிநீர் சிவகாசி நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகமாக செய்யப்படுகிறது. பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த அணை இயற்கை சூழ்ந்த பகுதியாகும்.
இந்த அணை நுழையும் இடத்திலிருந்து எல்லை வரை ஏராளமான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
காற்றோட்டம் உள்ள ரம்மியமான சூழ்நிலையில் இந்த அணைக்கு வரும் பொதுமக்கள் உட்காருவதற்கு போதுமான இருக்கை வசதி, குடிநீர்வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
தற்போது அணையி்ல் தண்ணீர் இருப்பதால் எண்ணற்ற பேர் வருகின்றனர். எனவே இங்கு சிறுவர்களுக்கான பூங்கா அமைத்தால் நன்றாக இருக்கும்.
பூங்காவில் விளையாட்டு சாதனங்கள், உடற்பயிற்சி கருவிகள் ஆகியவற்றை அமைத்து கொடுத்தால் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே வெம்பக்கோட்டை அணையில் சிறுவர் பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,535 ஆக உயர்ந்துள்ளது. 16,249 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,330 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,965 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பில்லாத நிலை தொடர்கிறது. இதனால் மாவட்டம் நோய் பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபடாத நிலை உள்ளது.

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16,531 ஆக உயர்ந்து உள்ளது
விருதுநகர்:
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16,531 ஆக உயர்ந்து உள்ளது
மாவட்டத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 355 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 16,528 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
16,245 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 3,376 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 52 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16531 ஆக உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.