என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  சிவகாசி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகாசி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சிவகாசி:

  சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள சரஸ்வதி பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50) . இவர் டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

  இந்த நிலையில் தனது இருச்சக்கர வாகனத்தில் சித்துராஜபுரம்-போடுரெட்டியபட்டி ரோட்டில் சென்ற முருகன் அந்த பகுதியில் உள்ள எல்லையம்மான்கோவில் அருகில் சென்ற போது நிலைதடுமாறி அந்த பகுதியில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.

  இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  இந்த சம்பவம் குறித்து அவரது மகன் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×