என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாவட்டத்தில் 675 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு மையங்களிலும் நேற்று 675 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    விருதுநகர்:

    நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 80,406 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

    16,219 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 16,512 ஆக உயர்ந்துள்ளது.

    2,148 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. தடுப்பூசி மாவட்டத்தில் உள்ள ஏழு மையங்களிலும் நேற்று 675 பேருக்கு போடப்பட்டது கிட்டத்தட்ட திட்டமிடப்பட்டதில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இதுவரை 1,544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அடுத்து வரும் நாட்களில் திட்டமிட்டபடி தினசரி 700 பேருக்கு தடுப்பூசி போடப்படும் எனஅதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் குறைந்த அளவிலேயே உள்ளது.
    Next Story
    ×