search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்தூர் ராமச்சந்திரன்"

    • மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்கும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
    • ராஜபாளையத்தில் மோட்டார் வாகன அலுவலகம் திறக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி ரோட்டில் ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வா ளர் புதிய பகுதி அலுவல கத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் மற்றும் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    அதனை தொடர்ந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த பயனா ளிக்கு புதிய அலுவலகத்தின் மூலம் முதல் பழகுநர் உரி மத்தை அவர்கள் வழங்கி னார்கள்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் பேசுகையில்:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், ஒவ்வொரு திட் டங்களையும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யிலும், பெண்களின் முன் னேற்றத்தை மேம்படுத்தும் வகையிலும் செயல்படுத்தி வருகிறார்.

    ராஜபாளையம் பகுதி மக்கள் முன்பு போக்கு வரத்துத்துறை சார்ந்த பணி களுக்காக கிருஷ்ணன் கோவில் அலுவலகம் வரை செல்ல வேண்டி இருந்தது. பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று, ராஜபாளை யம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தொடர் முயற்சி மேற்கொண்டதின் பலனாக அமைச்சரின் உறுதுணையுடன் போக்கு வரத்துறை மூலம் தற்போது மோட்டார் வாகன ஆய்வா ளர் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக கலைஞரின் மகளிர் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் பெற்று பயன்பெற்று வருகின்றனர். மேலும், மேல்முறையீட்டிற்கு விண்ணப்பித்துள்ள பெண்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான வர்களுக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

    விண்ணப்பம் செய்துள்ள வர்களில் தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபடாத வண்ணம் அதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கின்றது என்று அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்,

    பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமை பெண் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என பெண்களின் பொருளா தார ரீதியான முன்னேற்றத் திற்கு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையி லான அரசிற்கு அனைவரும் உறுதுணையாகஇருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ், ராஜ பாளையம் நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம், துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அளித்த தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் நான் தூங்கவில்லை.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்த பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை கீழ் கோர்ட்டுகளில் நடைபெற்று வந்தது.

    விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவின்பேரில் வேலூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து கடந்த ஜூன் மாதம் பொன்முடியை விடுவித்து வேலூர் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது.

    இதற்கு எதிராக ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன் வந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விளக்கம் அளிக்க அவர் உத்தரவிட்டார்.

    அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், இப்படி தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும். லஞ்ச ஒழிப்பு போலீசார் இதன் மூலம் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று வாதிட்டார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடே சன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தவறு நடக்கும்போது கண்ணை முடிக்கொண்டு இருக்க முடியுமா? ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அளித்த தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் நான் தூங்கவில்லை. அமைச்சர்கள் விடுவிக்க கோரி மனு அளித்தபோது முதலில் எதிர்ப்பு தெரிவித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை அதிகாரி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தீர்ப்புக்கு ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டு தேதியை மட்டும் மாற்றி தீர்ப்பு கூறியது போல தெரிகிறது. யார் அதிகாரத்துக்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகச் செய்கிறார்கள்.

    சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன் வந்து விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றம் என்பது குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது. கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளன. இதனை பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியது போல் ஆகி விடும்.

    எனவே இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் 2 அமைச்சர்களும் உரிய பதில் அளிக்க உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார். பொன்முடி வழக்கில் ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • விருதுநகரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார்.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விருதுநகரில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    மாணிக்கம்தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை பார்வை யிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவ லர்கள் சிரமமின்றி பணி புரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறை களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ரூ.309.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொறியாளர் இந்துமதி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 96 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி-தங்க நாணயங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
    • தலைவர் சுந்தரலட்சுமி, யூனியன் தலைவர் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுப்பாராஜ் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    இதில் அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு யூனியனை சேர்ந்த 96 ஏழை பெண்களுக்கு ரூ.42 லட்சத்து 92 ஆயிரத்து 448 மதிப்பில் 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் திருமண நிதியுதவிகள் என மொத்தம்; ரூ.87 லட்சத்து42 ஆயிரத்து 448 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது படித்து காவல்துறையில் பணி பெற்று, சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் பெண்கள் பணியாற்றி வரும் காலமாக இருக்கிறது.

    போதிய பணவசதி இல்லாத காரணத்தால் ஏழை பெண்களின் திருமணம் தடைபடுவதால், திருமண நிதியுதவி திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டபடிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.

    பெண் குழந்தைகள் படிக்க வைக்க வேண்டும். படிக்க வைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை அவர்களாகவே உருவாக்கி கொள்ள முடியும். பெண்கள் கல்வி கற்பதற்கும், வாழ்வில் ஆண்களுக்கு நிகராக முன்னேற்றம் அடைவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து உருவாக்கி தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, யூனியன் தலைவர் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×