என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் 6-வது மைல் நீர்த்தேக்கம் மொத்தம் 17 அடி கொள்ளளவு கொண்டதாகும்.
- தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கிருஷ்ணன் கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருச்சுழி, சேத்தூர், முகவூர், தளவாய்புரம், செட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் தமிழகத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவானது. இந்த நிலையில் நேற்று காலையில் மழை சற்று குறைந்து வெயில் முகம் காட்டியது. இதற்கிடையே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக அதன் அடிவாரத்தில் உள்ள ராஜபாளையம் நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கோவிலுக்கு முன்பாக செல்லும் ஆற்றில் பாறை, மரங்கள் அடித்து வரப்பட்டன. இந்த தண்ணீர் ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான 6-வது மைல் குடிநீர் தேக்கத்திற்கு சென்றது. நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் இரவு அங்கேயே முகாமிட்டு குடிநீரை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் இடைவிடாத மழையால் முள்ளியாறு, பேயனாறு ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. புதுக்குளம், செங்குளம், கருங்குளம், பிரண்டைக்குளம் உள்ளிட்ட ராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள 108 கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும், ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் 6-வது மைல் நீர்த்தேக்கம் மொத்தம் 17 அடி கொள்ளளவு கொண்டதாகும். இங்கு 15 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தற்போது நீர்மட்டம் 13 அடியை எட்டியுள்ளது. தொடர்மழை காரணமாக ராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் பள்ளங்களாக மாறி, போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. தினமும் ஏராளமானோர் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வத்திராயிருப்பு-99.6, விருதுநகர், ராஜபாளையம்-88, திருச்சுழி-23, காரியாபட்டி-46, ஸ்ரீவில்லிபுத்தூர்-64, சாத்தூர்-25, சிவகாசி-24.4, பிளவக்கல்-41.2, வத்திராயிருப்பு-93.6, கோவிலாங்குளம்-63.9, வெம்பக்கோட்டை-16.2, அருப்புகோட்டை-36. மாவட்டம் முழுவதும் மொத்தம் 610 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் நேற்று காலை முதலே கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. ராமநாதபுரம், பெரியபட்டினம், பனைக்குளம், என்மனங்கொண்டான், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம் உள்ளிட்ட பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-74.60, மண்டபம்-12.40, ராமேசுவரம்-11.50, பாம்பன்-11.90, தங்கச்சிமடம்-23.40, பள்ளமோர்க்குளம்-18, திருவாடானை-10.60, தொண்டி-8.80, ஆர்.எஸ்.மங்கலம்-9.80, பரமக்குடி-58.60, முதுகுளத்தூர்-45, கமுதி-53.60, கடலாடி-65, வாலிநோக்கம்-15.20, தீர்த்தாண்ட தனம்-23.40, வட்டாணம்-21.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 479 மி.மீ. மழை பெய்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் கண்மாய், குளங்கள் நிரம்பியுள்ளன. மானாமதுரை, காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், நெற்குப்பை உள்ளிட்ட ஊர்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய, விடிய அடை மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
- சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும்.
- இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது.
சிவகாசி:
பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் 90 சதவீத பட்டாசு தேவைகளை சிவகாசி நகரம் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரவு பகலாக ஊழியர்கள் பட்டாசுகளை உற்பத்தி செய்தனர்.
பண்டிகை நாட்கள் நெருங்க நெருங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கி சென்றனர். குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்தன.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு வகைகள் உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடிக்கு தடை, பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு விதிமுறைகளை கோர்ட்டும், அரசும் விதித்துள்ளது.
இவ்வளவு இடர்பாடுகளையும் மீறி இந்த முறை சிவகாசியில் கடந்த சில வாரங்களாகவே பட்டாசு வியாபாரம் தீவிரமாக நடைபெற்றன. வெளி மார்க்கெட்டுகளில் விற்பதை விட சிவகாசியில் விலை குறைவாக இருக்கும். எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிவகாசிக்கு வந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆலைகள் மற்றும் கடைகளுக்கு நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளிக்கு முதல் நாள் வரை சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம்.
சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும். நாட்கள் செல்ல செல்ல பட்டாசுகள் விற்பனையாகி வருகின்றன. இதனால் இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் கிடைக்கும் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு திரும்புகின்றனர்.
சிவகாசியில் பட்டாசு விலை விபரம்:-
புஷ்வாணம் 1 பாக்ஸ்-ரூ.90, தரைசக்கரம்-ரூ.80, சீனிவெடி பாக்கெட்-ரூ.30, சாட்டை-ரூ.15, கம்பி மத்தாப்பு-ரூ.40, ராக்கெட் சிறியது-ரூ.40, 30 ஷாட் பெட்டி-ரூ.350.
மேற்கண்ட பட்டாசுகள் வெளி மார்க்கெட்டுகளில் பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிவகாசியில் பட்டாசு வாங்க குவிகின்றனர்.
நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் இந்த முறை சிவகாசியில் பட்டாசு வியாபாரம் நன்றாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 95 சதவீத பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளது.
இன்னும் பண்டிகைக்கு 2 நாட்கள் இருப்பதால் முழுமையாக பட்டாசுகள் விற்பனையாகிவிடும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- விருதுநகர் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலி, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சிறிய கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் மேலும் ஒரு கோவிலில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:-
விருதுநகர் அருகே உள்ள வெள்ளூர்-புதுப்பட்டி ரோட்டில் மாகாளி பட்டி என்ற இடத்தில் தும்மம்மாள் அம்மன் கோவில் உள்ளது. கிராம கோவிலான இங்கு அதே பகுதியை சேர்ந்த சிவக் குமார் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத் தன்று இரவு பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அலுவலக அறைக்கு சென்ற கொள் ளையர்கள் அம்மனின் தங்க தாலி, வெள்ளி நாகர் சிலை, உண்டியல் பணம் 3 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மறு நாள் கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு தாலி, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி சுந்தரராஜன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் சேக்கிழார் மன்றம் சார்பில் ஆண்டு விழா போட்டிகள் நடந்தது.
- போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் பொருளாளர், மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம், சேக்கிழார் மன்ற அறக்கட்ட ளையின் 39-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவி களுக்கு இடையே சிவ புராணம், திருத்தொண்டத் தொகை ஒப்பித்தல், தேவாரப் பண்ணிசை, நடனம், பேச்சு, கட்டுரை மற்றும் நாடக போட்டிகள் மன்றத் தலைவர் பூமிநாதன் வழி காட்டுதலின்படி நடைபெற்றது. கவுரவ தலைவர் முத்து கிருஷ்ணராஜா போட்டி களை தொடக்கி வைத்து பேசினார். போட்டிகளில் 25 பள்ளிகளில் பயிலும், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நடுவர்களாக சிதம்பர நாதன், முத்தையா, தமிழ்ப் பித்தன், கோவிந்தன், சங்கர லிங்கம், சுதாகர், ஜெய சுகந்தி, மீனா, வள்ளியம்மாள் ஆகியோர் பணியாற்றி வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு ஜனவரி மாதம் நடைபெற இருக்கின்ற ஆண்டு விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். நாடகம், நடன போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் நாடகம் மற்றும் நடனம் ஆண்டு விழாவின் போது மேடையேற்றப்படும் என்பதை பொதுச்செயலர் கணேசன் தெரிவித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் பொருளாளர் சுப.முத்தையாவும் மன்ற உறு்பினர்களும் செய்திருந்தனர்.
- சிவகாசியில் தீபாவளி பண்டிகையையொட்டி தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால் நீர் நிலைகளில் இறங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
தாயில்பட்டி
சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சிவகாசியில் காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத் தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜே.சி. எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.
சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசுகையில், பட்டாசு களை கையில் வைத்து வெடிக்க கூடாது, பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீரை ஊற்ற வேண்டும். தீக்காயத்திற்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து.
உடலில் தீப்பற்றினால் ஓட முயற்சி செய்யக் கூடாது. கனமான போர்வை போன்ற துணிகளை போர்த்தி தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும் . உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். பருவமழை பெய்ய தொடங்கி உள்ள தால் நீர் நிலைகளில் இறங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மழை நீரை பார்த்து குளங்கள் கண்மாய்களில் குளிக்க ஆர்வம் காட்ட கூடாது. முறையாக நீச்சல் தெரியாமல் நீரில் இறங்க கூடாது. நீர் நிலைகளில் பள்ளம் ஆபத்து இருப்பதை உணர வேண்டும். மேலும் மழை பெய்யும் போது இடி, மின்னல் ஏற்படும்போது மரதடியில் ஒதுங்க கூடாது. தரையில் அமர்ந்து குனிந்து நிலையில் உட்கார வேண்டும். செல்போனையும் உபயோகப்படுத்தக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
- திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மாணவர்களிடம் கற்றல் திறன் பற்றி கேட்டறிந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சவ் வாசுபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.72 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புரணமைக் கப்பட்ட பணிகளை பார் வையிட்டு ஆய்வு செய்து பள்ளி மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்ட றிந்தார்.
மேலும் மதிய உணவு சமையல் கூடத்திற்கு சென்று பார்வையிட்டு, வழங்கப்பட்டு வரும் உண வின் தரம் குறித்தும், பதிவே டுகளையும் ஆய்வு செய்து, திட்டத்தின் மூலம் பயன்பெ றும் மாணவர்களின் எண் ணிக்கை குறித்தும் கேட்ட றிந்தார். பின்னர், சவ்வாசு புரத்தில் உள்ள பொது நூல கத்திற்கு சென்று பார்வை யிட்டு பதிவேடுகள், புத்தகங் களை ஆய்வு செய்து, வாசிப் பாளர்களிடம் நூலகத்தின் பயன்பாடு, தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந் தார்.
குள்ளம்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் ரூ.5.48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட் டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தி னையும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ள உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியினையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
முத்துராமலிங்கபுரம் அரசு துணை சுகாதார நிலையத்தில், மருந்துகளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், ம.ரெட்டியாபட்டி மேம்படுத் தப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு சென்று பிரசவ அறை, பிரசவத்திற்குபின் கவனிப்பு அறை, வழங்கப்படும் உணவு, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, மருந்துக ளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், மருந்துகள் மற்றும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
- ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனையிட வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- பணியிட மாறுதல் பெறும் சமயத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் கல்வி அதிகாரி சிக்கி இருப்பது ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன். இவர் சென்னைக்கு அரசு தேர்வு வாரிய இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பு 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் பணியிட மாறுதல் பெற்று சென்னை செல்லும் ராமனுக்கு நேற்று விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடந்தது.
இதில் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்து இரவு 9 மணியளவில் ராமன் மற்றும் அவரது உதவியாளர்கள் இருந்தனர். அப்போது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன், சால்வன்துரை ஆகியோர் தலைமையில் போலீசார் திடீரென அலுவலகத்திற்கு வந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமன், போலீசாரிடம் விவரம் கேட்டார். அப்போது ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனையிட வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த புகாரை ராமன் மறுத்தார். போலீசார் தொடர்ந்து அலுவலகத்தை சோதனையிட்டனர்.
அப்போது முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளரும், பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான சிறு செல்வராஜை சோதனையிட்டபோது அவரிடம் கணக்கில் வராத ரூ.13 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இரவு முழுவதும் முதன்மை கல்வி அலுவலர் ராமன், நேர்முக உதவியாளர் சிறு செல்வராஜ், இளநிலை உதவியாளர் சாணக்கியன் ஆகியோரை போலீசார் அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள மார்டன் நகரில் உள்ள ராமன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பீரோவில் ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதற்கான உரிய கணக்கும் முதன்மை கல்வி அதிகாரியிடம் இல்லை.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற்று தர முதன்மை கல்வி அதிகாரி லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அண்மையில் சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற்று தர தலா ரூ.3 லட்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதற்கு உடந்தையாக சிறு செல்வராஜ், சாணக்கியன் ஆகியோர் இருந்துள்ளனர். பணம் சிக்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன் உள்பட அவரது உதவியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியிட மாறுதல் பெறும் சமயத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் கல்வி அதிகாரி சிக்கி இருப்பது ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பிரசாத கடையை அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயன்றார்.
- தீ விபத்து எதிரொலியாக கோவுல் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலில் பிரசாத கடை நடத்துவதற்கான உரி மையை ராமர் என்பவர் ஏலம் எடுத்து ஆண்டாள் சன்னதி கொடி மரம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலை யில் மதுரை மீனாட்சி அம் மன் கோவில் வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக கோவுல் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு நடந்த கோவில் கடைகளுக்கான ஏலத்தில் கோவில் வளாகத்திற்கும் கொடிமரம் அருகே கடை வைக்க கூடாது. மாறாக கோயில் முன் உள்ள மண்ட பத்திலோ, ஆடிப்பூர கொட் டகையிலோ சொந்த மாக செட் அமைத்து பிரசாத கடை வைத்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை யுடன் ஏலம் விடப்பட்டது.
இந்த ஆண்டு பிரசாத கடை நடத்துவதற்கான உரிமையை ரூ.21 லட்சத்திற்கு ஏலம் எடுத்த ராமர் கொடி மரம் அருகிலேயே கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று கோவில் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடையை அப்புறப்படுத்த முயன்ற போது, எதிர்ப்பு தெரிவித்த ஒப்பந்ததாரர் ராமர், அவரது சகோதரி மற்றும் மகளுடன் உடலில் நெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர்களை போலீசார் தடுத்தனர். கடை யில் இருந்த பொருட்களை அகற்றிய ஊழியர்கள் கோவில் முன் உள்ள மண்ட பத்தில் வைத்தனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் முத்துராஜா கூறுகையில், இந்த ஆண் டுக்கான ஏலத்தில் கோவில் வளாகத்திற்குள் கடை வைக்க அனுமதி கிடையாது. அதற்கு பதில் கோவில் முன் உள்ள மண்டபத்திலோ அல்லது ஆடிப்பூர கொட்ட கையில் பிரசாத கடை அமைத்துக் கொள்ள வேண்டும் தெளிவாக குறிப்பிடப்பட்டது. இது ஒப்பந்தத் தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆடிப்பூர திருவிழா முடிந்த பின் கடையை இடமாற்றம் செய்து கொள் கிறேன் எனக்கோரி யதால் ஒரு மாதம் அவகாசம் வழங் கப்பட்டது. அதன்பின் 4 முறை நோட்டீஸ் அனுப்பி யும் கடையை அகற்றவில்லை. அதனால் கோவில் பணியா ளர்கள் மூலம் கொடிமரம் அருகே இருந்த பொருட்கள் எடுக்கப்பட்டு, கோவில் முன் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது என் றார்.
- 2-வது திருமணம் செய்து கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய திருப்பூர் வாலிபர்-உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மாப்பிள்ளை வீட்டாருக்கு 6½ பவுன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் சீர் கொடுத்துள்ளனர்.
விருதுநகர்
திருத்தங்கல் திருவள்ளூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரெஜினாமேரி. இவருக்கும், திருப்பூரை சேர்ந்த செல்வமணி என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு 6½ பவுன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் சீர் கொடுத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின் கணவர் வீட்டில் ரெஜினா மேரி வசித்து வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் கூடுதலாக ரூ.1 லட்சம் வாங்கி தரவேண்டும் என கேட்டு ரெஜினா மேரியை, கணவர் துன்பு றுத்தி வந்ததாக கூறப்படு கிறது.
அவருக்கு உடந்தை யாக தாய் பொன்னுத்தாய், சகோதரிகள் கலையரசி, சந்திராதேவி, உறவினர் திருத்தங்கல் லலிதா உள் ளிட்டோர் ரெஜினா மேரியிடம் கூடுதல் வரதட் சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் செல்வ மணிக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ரெஜினா மேரி சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து மனு செய்தார். கோர்ட்டு உத்தர வின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீ சார் செல்வமணி மற்றும் உறவினர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 100 நாள்வேலை திட்ட பயனாளிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
- தாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்தால் அந்த கிராமப்புற ஏழை தொழிலா ளர்கள் பாதிக்கும் நிலை தவிர்க்கப்படும்.
விருதுநகர்
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதிய நிலுவையை வழங்க நடவ டிக்கை எடுக்கவேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் பிரதம ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ஊதியப்பட்டு வாடா செய்யப்படாதநிலையில் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடிதம் எழுதி உள்ளேன். ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
100 நாள்வேலை திட்ட பணியாளர்களுக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.87.3 கோடி ஊதிய நிலுவை உள்ளது. விருது நகர் நாடாளுமன்ற தொகுதி யில் ஒவ்வொரு பயனாளிக் கும் குறைந்த பட்சம் ரூ.17, 500 ஊதியம் வரவேண்டிய நிலை உள்ளது. இது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது.
ஏற்கனவே இதுகுறித்து மத்திய நிதி மந்திரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் நான் எதிர்பார்த்த படி இந்த பிரச்சினையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் வாழ் வாதாரம் இழந்து தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.
எனவே தாங்கள் உடனடி யாக இந்த பிரச்சினையில் தலையிட்டு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக பட்டுவாடா செய்யப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இதில் தாங்கள் உடனடி நட வடிக்கை எடுத்தால் அந்த கிராமப்புற ஏழை தொழிலா ளர்கள் பாதிக்கும் நிலை தவிர்க்கப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு உண்டு.
- முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள மருது அய்யனார் கோவில் அரங்கில் விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். போட்ட விதை. அதனை ஜெயலலிதா உயிரோட்டமாக வளர்த்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை ஆலமரமாக்கி உள்ளார். நீங்கள் இங்கே வந்து இளைப்பாறலாம். அ.தி.மு.க. பூத் கமிட்டியினர் முறையாக செயல்பட்டால் வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன் எடப்பாடி பழனிசாமி பிரதமர் யார்? என்பதை சுட்டிக்காட்டுவார். அவரே பிரதமராகும் வாய்ப்பு உண்டு. எனவே பூத் கமிட்டியினர் தீவிரமாக செயல்பட வேண்டும். பட்டாசு தொழிலை தி.மு.க. அழிக்க முயற்சிக்கிறது. பண்டிகையை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் பட்டாசு கடை வைக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கலாநிதி, நகரச் செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா,விருதுநகர் மாவட்ட ஜெ.பேரவை துணைத்தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.62.68 லட்சம் மதிப்பில் மானிய உதவிகளை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
- மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி கள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொட்டகை அமைத்தல், கறவைப்பசு, ஆடுகள் மற்றும் நாட்டுக் கோழிகள் கொள்முதல் செய்தல், பசுந்தீவன பயிர் சாகுபடி செய்தல், இயந்திர புல் நறுக்கும் கருவி கொள்முதல் செய்தல் உள்ளிட்ட கால்நடை சார்ந்த தொழில் புரிவதற்கும், கருவிகள் கொள்முதல் செய்வதற்கும் 30 பயனா ளிகளுக்கு மொத்தம் ரூ.99.50 லட்சம் திட்ட மதிப்பில் ரூ.62.68 லட்சம் அரசு மானி யத்திற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






