2-வது முறையாக மனைவி மாயம்

விருதுநகர் அருகே 2-வது முறையாக மனைவி மாயமானார். இது தொடர்பாக அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.
2-வது முறையாக மனைவி மாயம்
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி பி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ண வேணி கோவில்பட்டி யில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாரிக்கனி என்பவருடன் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து கணவர் கொ டுத்த புகாரின் அடிப் படையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணவேணி, மாரிக் கனி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களை போலீசார் எச்சரித்து கிருஷ்ண வேணியை அவரது கணவருடன் அனுப்பி வைத்த னர். இந்த நிலையில் கிருஷ்ண வேணி மீண்டும் மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து ராஜ்குமார் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com