என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது30),  ஆடு மேய்க்கும் தொழிலா£ளி. இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 8&ம் வகுப்பு படிக்கும் மாணவியை 2 மாதமாக பாலியல் தொந்தரவு செய்தார். அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போது காலை, மாலை வேலைகளில் பின் தொடர்ந்து பாலியல் நோக்கத்தோடு தனியாக பேசவேண்டும் எனக்கூறி கட்டாயப்படுத்தினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் மகாலிங்கத்தை எச்சரித்தனர். இருந்தபோதிலும் மகாலிங்கம் அந்த மாணவியை பின்தொடர்ந்து தனியாக பேச வேண்டும், இல்லையென்றால்  கொலை செய்து விடுவேன் என்றுகூறி மிரட்டல் விடுத்துள்ளார். 

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வத்திராயிருப்பு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.  இந்த புகாரின் அடிப்படையில் போலீசார்  மகாலிங்கத்தை  போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
    பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது.

    அதன்படி இந்த மாதம் பிரதோ‌ஷம், பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    பக்தர்கள் காலை 7 மணி முதல் பகல் 11 மணிவரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பிரதோ‌ஷம் மற்றும் பவுர்ணமி அன்று சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும், மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

    பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

    இந்தநிலையில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. 

    வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப் பகுதியில் தங்குவதற்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    சாலையை கடக்க முயன்ற இளம்பெண் வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் தனியார் காட்டன் மில் உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த நிமிகுமாரி (வயது 18) குடும்பத்துடன் தங்கியிருந்து பணி புரிந்து வந்தார். 

    கடந்த 9-ந் தேதி இரவு நிமிகுமாரி மில் வாசல் எதிரே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த நிமிகுமாரி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தென்காசி மாவட்டம் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா-மாரியம்மன் தம்பதியின் மகன் மணிகண்டன் (வயது 22). 

    இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பார்மசி கல்லூரியில் பிபார்ம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். 

    4 நாட்களுக்கு முன்பு இவர் அங்குள்ள விடுதி அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தாயார் அம்பிகா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


    செல்போன் டவர் அமைப்பதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்தவர் சண்முகராஜ் (24). இவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க அனுமதி அளித்தால் ரூ.30 லட்சம் அட்வான்ஸ் மற்றும் மாதம் ரூ 30,000 வாடகை தருகிறோம் என கார்த்திகா கரன்தீப் சிங் மற்றும் 5 பேர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய சண்முகராஜ் தனது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் அந்த கும்பல் ஜி.எஸ்.டி. மற்றும் வாகன செலவுக்காக ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 790 தருமாறு கேட்டது. உடனே சண்முகராஜ் பல்வேறு தவணைகளில் அந்த பணத்தை செலுத்தி உள்ளார். 

    பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் உரிய பதில் அளிக்காமல் அந்த கும்பல் ஏமாற்றியுள்ளது இதுகுறித்து சண்முகராஜ் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.


    தாய்-மகன் மீது தாக்குதல் நடந்தது-.
    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சியை சேர்ந்தவர் பொன்மலர் (வயது 24). இவர் பரளச்சி போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். 

    அதில், சம்பவத்தன்று கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ், அவரது தாய் குப்பச்சி,  சகோதரர் பார்த்திபன், சகோதரி பாப்பா லட்சுமி ஆகிய 4 பேரும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்ததோடு என்னையும் எனது சகோதரி ரவீனா, மற்றும் தாயை சரமாரியாக தாக்கினர் என்று குறிப்பிட்டுள்ளார். 

    இதன் அடிப்படையில் போலீசார் 3 பெண்களை தாக்கிய சண்முகராஜ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



    சேத்தூர் பகுதியில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்

    சேத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது சேத்தூர் மேடு பட்டியை சேர்ந்த குத்தால முத்து (வயது 30), சக்தி மேடை யாண்டி (52) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் 5 முடை ஆற்று மணலை திருடி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


    மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடக்கிறது.
    விருதுநகர்

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில்  பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. 

    சிறப்பு மருத்துவர்கள் இயலாத்தன்மைக்கேற்ப குழு முகாமிற்கு வருகை தந்து மருத்துவச்சான்றிதழ் வழங்குதல், தேசிய மாணவர் களின் அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரைத்தல், அறுவைச்சிகிச்சை பரிந்துரை போன்ற செயல்பாடுகள் முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    விருதுநகர் ஒன்றியத்தில் வருகிற 14-ந் தேதி  சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத் திலும், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 17&ந் தேதி சி.எஸ்.ஐ (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி வளாகத் திலும் முகாம் நடக்கிறது. 

    காரியாப்பட்டி ஒன்றியத்தில் 18&ந் தேதி கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், நரிக்குடி ஒன்றியத்தில் 19-ந் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ராஜபாளையம் ஒன்றியத்தில் 21-ந் தேதி  எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் முகாம் நடக்கிறது. 

    சாத்தூர் ஒன்றியத்தில் 22-ந் தேதி  எட்வர்டு மேல்நிலைப்பள்ளியிலும், சிவகாசி ஒன்றியத்தில் 24-ந் தேதி எ.வி.டி. நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத் தில் 25-ந் தேதி ஊரணிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. 

    திருச்சுழி ஒன்றியத்தில் 26-ந் தேதி எம். ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 28-ந் தேதி  அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வத்றாப் ஒன்றியத்தில் 29-ந் தேதி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும்  முகாம் நடைபெற உள்ளது. 

    இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறளாளி மாணவர்களும், பெற்றோர்களும் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    விருதுநகர் அருகே மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்.
    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதுரகிரி. இவரது மகள் ஆனந்தி(20),  அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். 

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற இவர் மாயமாகி விட்டதாக நரிக்குடி போலீசில் சதுரகிரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்த கண்ணாயிரம் மகள் விஜயலட்சுமி (20) திருச்சுழி அருகே உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். இதற்காக விடுதியில் தங்கியிருந்த அவர் மாயமானதாக விடுதி காப்பாளர் மரகதம் புகார் செய்துள்ளார். திருச்சுழி போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உலக மகளிர் தினத்தையொட்டி ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் பெண் போலீசாருக்கு, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
    ராஜபாளையம் 

    ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. சத்யா குழுமங்களின் நிர்வாகி குமரேசன் தலைமை வகித்தார். துணை நிர்வாகி அரவிந்த் முன்னிலை வகித்தார். 
     
    பள்ளி மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ராகுமரேசன், டாக்டர் மோனிஷா, நிர்வாக அதிகாரி அமுதா, பள்ளி ஆலோசகர் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவர் கவிவர்ஷன் வரவேற்றார். மாணவி தீபாஸ்ரீ தொகுத்து வழங்கினார். மாணவி ரக்ஷனா கவிதை படித்தார்.  

    அபர்ணாஸ்ரீ சொற்பொழிவாற்றினார். விழாவின் முத்தாய்ப்பாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்ற மாணவ&மாணவிகள் ஆய்வாளர் மரியபாக்யம் உள்ளிட்ட காவல்துறை பெண் அதிகாரிகளுக்கு மலர்கொத்து கொடுத்து மகளிர்தின வாழ்த்துக்களைகூறி திகைப்பில் ஆழ்த்தினர். 

    அதைத்தொடர்ந்து அரவிந்த் மருத்துவமனையில் டாக்டர் சித்ராகுமரேசன், ரோட்டரி சங்க தலைவி டாக்டர் ராதா, நகராட்சி ஆணையாளர் சுந்தரம்மாள், டைகர் பர்னிச்சர் உரிமையாளர் ஹமிதாபீவி ஆகியோரை சந்தித்து வாழ்த்துக் கூறினர். மாணவி மதுஸ்ரீ நன்றி கூறினார்.
    ரேசன் கடைகளில் கைரேகை இல்லாமல் பொருட்கள் பெறலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

     விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின்கீழ் உள்ள நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய எந்திரத்தில்(POS Machine)   கைரேகை பதிவுமுறை (Bio Metric)  மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நேர்வில் சில சமயங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய எந்திரத்தில் கைரேகைபதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவுமுறை செயல்படுத்த இயலாத சூழலில், குடும்ப அட்டையின் துரித குறியீட்டினை விற்பனை முனையத்தில் ஸ்கேன் செய்வதின் மூலமும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் உள்ளீடு செய்து அதன் அடிப்படையில் விநி யோகம் தொடர்ந்து மேற் கொள்ளப்படலாம் எனவும், மேலும் விற்பனை முனைய தொழில்நுட்ப இடையூறு நீக்கம் செய்யப்பட்டபின்  உடன் மீண்டும் விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் அத்தியாவசிய பண்டங்கள் விநியோகம் செய்யப்படலாம் என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    எனவே மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி இனிவரும் நாட்களில், நியாய விலைக்கடைகளில் பொதுமக்கள் தங்குதடையின்றி அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.

     மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    ×