என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகேட்டார்.
    ராஜபாளையம் 

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் மற்றும் மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சி பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு இயக்க முகாம் நடந்தது. 

    இதில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் வீடு,வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். 

    அதற்கு  உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில்   வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியரிடம்  பேசி குடிநீர் சீராக வழங்கவும், வாறுகால்களை உடனடியாக தூர்வாரவும் துரித நடவடிக்கைகளை  மேற்கொண்டனர். 

    உடனடியாக தீர்க்கமுடியாத கோரிக்கைகளை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளின் கவனதிற்கு கொண்டு சென்று மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.

    இந்தமுகாமில்  இலவசமாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலை பேசி எண் இணைத்தல், புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், மற்றும் புதிய ரேசன்கார்டு விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

    இதுபோல் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஆதார் அட்டை திருத்தம் செய்ய இலவச முகாம் அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. கூறினார்.
     
    இந்த நிகழ்வில் வட்டாட்சியர் ராமச்சந்திரன்,  வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ்,    மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி,பேரூர் செயலாளர் இளங்கோவன், கிளை செயலாளர்கள் சீதாராமன், சின்னத்தம்பி, வைரவன், தங்கப்பன்,   மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    வீடு, வீடாக சென்று குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வும் ஏற்படுத்தி கொடுத்த எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா நடந்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் நடராஜன், சரஸ்வதி பள்ளியில் ஜே.சி. ஐ. கிரீன் சிட்டி சார்பில் மகளிர் தின விழா நடந்தது. 

    தலைவர் அமுதா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சுகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  மாவட்ட துணைத்தலைவர் ரேணுகாதேவி கலந்துகொண்டு சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 

    கலைநிகழ்ச்சிகள் நடத்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய செயலாளர் வேதா செந்தில், பொருளாளர் ஈஸ்வரி ஆகியோரும், பள்ளி நிர்வாகமும் செய்திருந்தனர்
    பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று பங்குனி மாத பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரம் முன்பு குவிந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பங்குனி மாத பிரதோ ஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பிரதோ‌ஷ பூஜைகளும் நடைபெறுகிறது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். முன்னதாக கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்து அதற்கு பதிலாக பக்தர்களின் உடமைகள் கோவிலுக்கு எடுத்து செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் துணிப் பை வழங்கினார்.

    தாணிப்பாறை அடி வாரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

    விருதுநகர் அருகே இளம்பெண்கள் 2 பேர் மாயமானார்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த 17வயதுடைய மாணவியை சம்பவத்தன்று அவரது பெற்றோர் படிக்கவில்லை என்று கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதில் விரக்தியடைந்த மாணவி திடீரென மாயமானார். 

    ராஜபாளையம் சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர்சேர்வராயன். இவரது மகள் முனீஸ்வரி(19). தையல்கடையில் பணிபுரிந்து வந்த இவர் திடீரென மாயமானார்.  2சம்பவங்கள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன், சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பாம்பு கடித்து விவசாயி பாதாபமாக இறந்தார்.
    ராஜபாளையம் 

    ராஜபாளையம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஆப்பனூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது69), விவசாயியான இவர் தனது நிலத்தில் நேற்றுமாலை வேலை பார்த்துக்கொண்டிருந்தார். 

    அப்போது விஷபாம்பு கடித்தது. உடனே வேலுச்சாமி தனது மகனிடம் தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ்சுடன் சிறிதுநேரத்தில் அங்குவந்த அவரது மகன் வேலுச்சாமியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

    அங்கு நிலையை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் வழியிலேயே வேலுச்சாமி பரிதாபமாக இறந்தார்.





    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நோய் கொடுமையால் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள பூசாரிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராக்குமுத்து(வயது50). கட்டிட தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமடையவில்லை. 

    இதில் விரக்தியடைந்த ராக்குமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகரில் சிறுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் கருப்பசாமி நகரில் 34வயதுடைய பெண் தையல்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் 2 வருடங்களுக்குமுன் இறந்து விட்டார். 

    இதனிடையே அந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச்சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் தையல்கடைக்கு சென்ற வேல்முருகன் அங்கிருந்த பெண்ணின் 13 வயதுடைய மகளை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

    இது குறித்த புகாரின்பேரில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    திருமணமான பெண்ணிடம் ஏன் பேசுகிறாய் என்று கேட்ட விவசாயி மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் செந்தில் (வயது 45), விவசாயி. இவரது உறவு பெண்ணிடம் அதே ஊரை சேர்ந்த பெத்துகுமார் செல்போனில் பேசி உள்ளார்.

    திருமணமான பெண்ணிடம் ஏன் பேசுகிறாய்? என செந்தில், அவரது மகன் சூர்யா ஆகியோர் பெத்துகுமாரை கண்டித்தனர்.

    இதுதொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் செந்தில் உறவு பெண்ணிடம் பேசுவதை பெத்துகுமார் நிறுத்தினார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் செல்போனில் பேசி உள்ளார். இதுபற்றி சூர்யாவுக்கு தெரியவந்தது.

    அவர் பெத்துகுமாரின் சகோதரர் விஜயகுமாரிடம் இதுபற்றி தெரிவித்தார். அப்போது அவர், அவதூறாக பேசியதோடு, நான் கொப்பு சித்தம்பட்டி ரோடு மலட்டம்மாள் கோவில் அருகே இருக்கிறேன். நீ இங்கு வா... பார்ப்போம் என கூறி உள்ளார்.

    இதனை தொடர்ந்து சூர்யா தனது ஆட்டோவில் சம்பவ இடத்திற்கு புறப்பட்டார். அப்போது அவருடன் தந்தை செந்தில், சகோதரர் வெயில்ராஜ் (19) ஆகியோரும் சென்றனர்.

    அவர்கள் சென்றதும் அங்கு இருந்த பெத்துகுமார், விஜயகுமார் மற்றும் கோபிநாத், ராஜபாண்டி, பாண்டியராஜன் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சூர்யா உள்ளிட்ட 3 பேரையும் தாக்கினர்.

    அப்போது அங்கு காரில் வந்த பெத்துகுமாரின் தாயார் விஜயலட்சுமி, எதிர் தரப்பை சேர்ந்த சூர்யா உள்பட 3 பேர் மீதும் காரை ஏற்றினார். இதில் செந்தில் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை சூர்யாவும், வெயில் ராஜூம் ஆட்டோவில் தூக்குப்போட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செந்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூர்யா கொடுத்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி, அவரது மகன்கள் பெத்துகுமார், விஜயகுமார் ஆகியோர் தேடி வருகின்றனர்.
    சிவகாசி அருகே உள்ள வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்றிச்சியில் பிரசித்தி பெற்ற வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு உலக நன்மைக்காகவும், குழந்தைவரம் வேண்டியும் சிறப்புயாக பூஜைகள் நடத்தப்பட்டன. சந்தனம், பால், திருநீறு  உட்பட 21வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. 

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.   இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில்  சிலநாட்களுக்கு முன்பு 14வயதுடைய சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் நடத்திய விசாரணையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி கடந்த வருடம் 7ம்வகுப்பு படித்து கொண்டிருந்தார். அப்போது அரசக்குளத்தை சேர்ந்த கோபிநாதன்(32) என்பவருக்கும், சிறுமிக்கும் சட்டவிரோதமாக  திருமணம் நடந்துள்ளது. இதில் அந்தசிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது-.

    இதுகுறித்து அருப்புக் கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கோபிநாதன், அவரது பெற் றோர் பொன்ராம்&லட்சுமி, உறவினர்கள் வேலுச்சாமி, அழகரக்காள் ஆகிய 5பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ராஜபாளையத்தில் பஸ்படிக்கட்டில் செல்போன் பேசியபடி சென்ற முதியவர் தவறிவிழுந்து பரிதாபமாக இறந்தார்.
    ராஜபாளையம் 

    ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவை  சேர்ந்தவர் கடற்கரை(வயது 60). இவர் சொக்கநாதன்புத்தூரில் உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பொருட்கள் வாங்குவதற்காக கடற்கரை பஸ்சில் ராஜபாளையம் சென்றார். பஸ் படிக்கட்டில் பயணம் செய்த அவர் செல்போனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார்.  அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் தவறி விழுந்தது.  

    படிக்கட்டிலேயே விழுந்த செல்போனை எடுப்பதற்காக கடற்கரை கீழேகுனிந்தார். அந்த நேரத்தில் வளைவில் பஸ் திரும்பியுள்ளது. இதனால் படிக்கட்டில் இருந்து கடற்கரை தவறி கீழே விழுந்தார். 

    இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கடற்கரை பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து செங்கல்சூளை அதிபர் ரகுராம் கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் புறக்காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உயரழுத்த மின்கம்பிஅறுந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாக திகழ்கிறது. இந்தபஜார் வழியாக  தினமும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 4 சக்கரவாகனங்கள், அரசு மற்றும் தனியார்பஸ்கள், பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள், தொழிற்சாலை பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என ஏராள மானோர் நடந்தும் சென்று வருகின்றனர்.

    நேற்று வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு வேலைகள் நடைபெற்றது.பின்னர் மாலை 5.30 மணி அளவில் மின்சாரம் கொடுக் கப்பட்டது.

    இந்த நிலையில் முத்தாலம்மன் பஜாரில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையில் உள்ள வளைவு பகுதியில் அதிக பவர்கொண்ட மெயின் மின்வயர் அதிக மின்பளு காரணமாக திடீரென அறுந்து விழுந்தது.உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வத்திராயிருப்பு மின் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்தப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து கிடந்த மின்வயர் இணை அப்புறப்படுத்தி மீண்டும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பஜார்பகுதியில் பள்ளிநேரம் மாலை நேரங்களில் அதிகஅளவில் இருக்கும் இந்நிலையில் பஜார் பகுதியில் மாலை 4.30 மணியில் இந்து 5.15 ஒரே பள்ளி மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக முத் தாலம்மன் பஜார் பகுதிக்கு பஸ் ஏறுவதற்காக அந்தநேரம் பள்ளி மாணவர்களின் நடமாட்டம்அதிக அளவில் இருக்கும். 

    அந்த நேரத்தில் பள்ளி மாணவர்களின் நடமாட்டம் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. அதிக மின்பளு காரணமாக திடீரென அறுந்துவிழுந்த மெயின் மின் வயரால் இந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×