என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்கம்பி அறுந்து விழுந்தது.
உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உயரழுத்த மின்கம்பிஅறுந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாக திகழ்கிறது. இந்தபஜார் வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 4 சக்கரவாகனங்கள், அரசு மற்றும் தனியார்பஸ்கள், பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள், தொழிற்சாலை பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என ஏராள மானோர் நடந்தும் சென்று வருகின்றனர்.
நேற்று வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு வேலைகள் நடைபெற்றது.பின்னர் மாலை 5.30 மணி அளவில் மின்சாரம் கொடுக் கப்பட்டது.
இந்த நிலையில் முத்தாலம்மன் பஜாரில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையில் உள்ள வளைவு பகுதியில் அதிக பவர்கொண்ட மெயின் மின்வயர் அதிக மின்பளு காரணமாக திடீரென அறுந்து விழுந்தது.உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வத்திராயிருப்பு மின் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்தப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து கிடந்த மின்வயர் இணை அப்புறப்படுத்தி மீண்டும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பஜார்பகுதியில் பள்ளிநேரம் மாலை நேரங்களில் அதிகஅளவில் இருக்கும் இந்நிலையில் பஜார் பகுதியில் மாலை 4.30 மணியில் இந்து 5.15 ஒரே பள்ளி மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக முத் தாலம்மன் பஜார் பகுதிக்கு பஸ் ஏறுவதற்காக அந்தநேரம் பள்ளி மாணவர்களின் நடமாட்டம்அதிக அளவில் இருக்கும்.
அந்த நேரத்தில் பள்ளி மாணவர்களின் நடமாட்டம் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. அதிக மின்பளு காரணமாக திடீரென அறுந்துவிழுந்த மெயின் மின் வயரால் இந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






