என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோசடி
ரூ.3 லட்சம் மோசடி
செல்போன் டவர் அமைப்பதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்தவர் சண்முகராஜ் (24). இவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க அனுமதி அளித்தால் ரூ.30 லட்சம் அட்வான்ஸ் மற்றும் மாதம் ரூ 30,000 வாடகை தருகிறோம் என கார்த்திகா கரன்தீப் சிங் மற்றும் 5 பேர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய சண்முகராஜ் தனது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் அந்த கும்பல் ஜி.எஸ்.டி. மற்றும் வாகன செலவுக்காக ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 790 தருமாறு கேட்டது. உடனே சண்முகராஜ் பல்வேறு தவணைகளில் அந்த பணத்தை செலுத்தி உள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் உரிய பதில் அளிக்காமல் அந்த கும்பல் ஏமாற்றியுள்ளது இதுகுறித்து சண்முகராஜ் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






