என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாம்
    X
    முகாம்

    மருத்துவ மதிப்பீட்டு முகாம்

    மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடக்கிறது.
    விருதுநகர்

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில்  பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. 

    சிறப்பு மருத்துவர்கள் இயலாத்தன்மைக்கேற்ப குழு முகாமிற்கு வருகை தந்து மருத்துவச்சான்றிதழ் வழங்குதல், தேசிய மாணவர் களின் அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரைத்தல், அறுவைச்சிகிச்சை பரிந்துரை போன்ற செயல்பாடுகள் முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    விருதுநகர் ஒன்றியத்தில் வருகிற 14-ந் தேதி  சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத் திலும், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 17&ந் தேதி சி.எஸ்.ஐ (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி வளாகத் திலும் முகாம் நடக்கிறது. 

    காரியாப்பட்டி ஒன்றியத்தில் 18&ந் தேதி கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், நரிக்குடி ஒன்றியத்தில் 19-ந் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ராஜபாளையம் ஒன்றியத்தில் 21-ந் தேதி  எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் முகாம் நடக்கிறது. 

    சாத்தூர் ஒன்றியத்தில் 22-ந் தேதி  எட்வர்டு மேல்நிலைப்பள்ளியிலும், சிவகாசி ஒன்றியத்தில் 24-ந் தேதி எ.வி.டி. நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத் தில் 25-ந் தேதி ஊரணிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. 

    திருச்சுழி ஒன்றியத்தில் 26-ந் தேதி எம். ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 28-ந் தேதி  அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வத்றாப் ஒன்றியத்தில் 29-ந் தேதி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும்  முகாம் நடைபெற உள்ளது. 

    இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறளாளி மாணவர்களும், பெற்றோர்களும் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×