என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைரேகை
    X
    கைரேகை

    ரேசன் கடைகளில் கைரேகை இல்லாமல் பொருட்கள் பெறலாம்

    ரேசன் கடைகளில் கைரேகை இல்லாமல் பொருட்கள் பெறலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

     விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின்கீழ் உள்ள நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய எந்திரத்தில்(POS Machine)   கைரேகை பதிவுமுறை (Bio Metric)  மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நேர்வில் சில சமயங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய எந்திரத்தில் கைரேகைபதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவுமுறை செயல்படுத்த இயலாத சூழலில், குடும்ப அட்டையின் துரித குறியீட்டினை விற்பனை முனையத்தில் ஸ்கேன் செய்வதின் மூலமும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் உள்ளீடு செய்து அதன் அடிப்படையில் விநி யோகம் தொடர்ந்து மேற் கொள்ளப்படலாம் எனவும், மேலும் விற்பனை முனைய தொழில்நுட்ப இடையூறு நீக்கம் செய்யப்பட்டபின்  உடன் மீண்டும் விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் அத்தியாவசிய பண்டங்கள் விநியோகம் செய்யப்படலாம் என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    எனவே மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி இனிவரும் நாட்களில், நியாய விலைக்கடைகளில் பொதுமக்கள் தங்குதடையின்றி அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.

     மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×