என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் கைது
பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
விருதுநகர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது30), ஆடு மேய்க்கும் தொழிலா£ளி. இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 8&ம் வகுப்பு படிக்கும் மாணவியை 2 மாதமாக பாலியல் தொந்தரவு செய்தார். அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போது காலை, மாலை வேலைகளில் பின் தொடர்ந்து பாலியல் நோக்கத்தோடு தனியாக பேசவேண்டும் எனக்கூறி கட்டாயப்படுத்தினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் மகாலிங்கத்தை எச்சரித்தனர். இருந்தபோதிலும் மகாலிங்கம் அந்த மாணவியை பின்தொடர்ந்து தனியாக பேச வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்றுகூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வத்திராயிருப்பு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






