என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ராஜபாளையத்தில் சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த சகோதரியை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டியது அந்தப்குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50), மில் தொழிலாளி. இவரது உடன்பிறந்த சகோதரி பாஞ்சாலி (60). இவர் அழகாபுரியில் வசித்து வந்தார்.

    பாஞ்சாலி சஞ்சீவி நாதபுரம் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த போது சொத்து பிரச்சினை காரணமாக தம்பி ரமேஷிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.

    நேற்று மதியம் 12 மணி அளவில் தம்பி வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த பாஞ்சாலி பின்னர் தம்பி வீட்டில் வந்து வாக்குவாதம் செய்தாராம்.

    கடும் கோபத்தில் இருந்த தம்பி ரமேஷ் பரணில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து உடன்பிறந்த சகோதரி என்றும் பாராமல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன், ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசார் பாஞ்சாலி பிரேதத்தை ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த சகோதரியை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டியது அந்தப்குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள மதுவார்பட்டியைச் சேர்ந்தவர் இன்பராஜா, லாரி டிரைவர். இவரது மனைவி அனுஷா. கடந்த 1ந்தேதி இன்பராஜா தூத்துக்குடிக்கு சவாரி செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன்பின் அவர் மனைவியை தொடர்புகொள்ளவில்லை.

    இந்த நிலையில் பந்தல்குடி முத்தாலம்மன் கோவில் அருகே இன்பராஜா விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக அனுஷாவுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற அனுஷா, கணவரிடம் விசாரித்தபோது தொடர் வயிற்றுவலி காரணமாக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். 

    இதையடுத்து இன்பராஜா அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்பராஜா இறந்தார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம் சிமெண்டு தொழிற்சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய அரவை ஆலை அமைப்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசின் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. 

    இங்கு சிமெண்ட் கார்ப்பரேசன்  நிர்வாக இயக்குநர் காமராஜ், கலெக்டர் மேகநாதரெட்டி, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்  ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்மவையிட்டு ஆய்வு செய்தனர்.

    இங்கு ரூ.40கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிமெண்டு அரவை ஆலை நிறுவுவதற்கான அமைவிடத்தை பார்வை யிட்டனர். 

    இந்த ஆய்வில் ஆலையில் உள்ள கிளிங்கர் வளாகம், வலிமை சிமெண்ட் பேக்கிங், சிமெண்ட் மில் அரவை இயங்குதல் உள்ளிட்ட உற்பத்தி முறைகளை பார்வையிட்டுட்டனர். பின்னர் ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை  அமைச்சர்கள் நட்டு வைத்தனர்.

    ஆய்வின்போது அமைச்சர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர்  மாநிலத்தில் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் தொழில் உற்பத்திகளை மேம்ப டுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை விரைவாக செயல்படுத்தி வருகிறார். 

    தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை 1966-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 14.6.1970 அன்று கருணாநிதியால் சிமெண்டு உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டது. 

    சிறப்பாக செயல்பட்ட இந்த ஆலை காலப்போக்கில் தாராளமயமாக்கல் கொள்கை அடிப்படையில் தனியாருக்கு சமமாக, ஈரப்பத தொழில்நுட்ப முறையிலிருந்து உலர்பத தொழில் நுட்பத்திற்கு மாற முடியாமலும், பயன்பாட்டில் உள்ள 2 சிமெண்டு அரவை எந்திரங்கள் மிக பழமையான காரணத்தால் அதிக அளவில் பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதாக இருந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி, இந்த பகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும், தென்மாவட்டங்களின் அதிக அளவிலான சிமெண்ட் தேவையினை கருத்திற்கொண்டும் ரூ.40 கோடி மதிப்பில் மணிக்கு 80 மெட்ரிக் டன் திறனுடைய நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் அமைக்கப்பட உள்ளது.

     அதனடிப்படையில்  புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் அமைப்ப தற்கான இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் நிறுவுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 10 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு சிமெண்ட் உற்பத்திக்கான நடவடிக்கை எடுக்கப்படும். 

    இப்பணி நிறைவு பெறும் பட்சத்தில் ஆண்டுக்கு சிமெண்ட் உற்பத்தி திறன் 2.75 லட்சம் மெ.டன் என்ற அளவிலிருந்து 5.6 லட்சம் மெ.டன்னாக அதிகரிக்கும். இதன் மூலம் நேரடியாக 60 நபர்களுக்கு நிரந்தர பணிகளும், 500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலு வலர் மற்றும் வணிக பொது மேலாளர் நர்மதாதேவி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, துணை பொது மேலாளர் (ஆலைத் தலைவர்) மாரிக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    சிவகாசி அருகே மாயமான வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (27). தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று பாலமுருகன் மது குடித்து வீட்டுக்கு வந்தார் இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இதனால் பாலமுருகன் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். ஆனால் அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பாலமுருகனை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் பலனில்லை.இந்த நிலையில் கோட்டையூரில் உள்ள ஒரு கல்யாண மண்டபம் அருகே அழுகிய நிலையில் வாலிபரின் பிணம் கிடந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் கொடுத்த தகவலின்படி மனைவி தனலட்சுமி அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் இறந்து கிடந்தது பாலமுருகன் என தெரியவந்தது.

    பாலமுருகன் அந்த பகுதியில் உள்ள மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்கள்-வாலிபர் மாயமானார்கள்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, திருமணமான இளம்பெண்கள் மாயமாகி வருவது தொடர்கதையாக உள்ளது. இது தொடர்பாக நாள்தோறும் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 2 இளம்பெண்கள், ஒரு வாலிபர் மாயமாகியுள்ளனர். அதன் விவரம் வருமாறு.

    விருதுநகர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது50). இவரது மகள் ஆர்த்தீஸ்வரி. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் கடந்த சிலமாதங்களாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படித்து வந்தார்.

    நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு ஆர்த்தீஸ்வரி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை‌. இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான்பட்டியை் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் தட்டச்சராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை‌. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காக்கிவாடன்பட்டி சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் அருண்குமார் (22). சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று அருண்குமார் பின்னர் வீடு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்த கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்தவர் ருக்குமணி (வயது 72). இவர் சம்பவத்தன்று அதேபகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். 

    அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ருக்மணியை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புகோட்டை சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (48). இவர் சம்பவத்தன்று ஜவுளி கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென மகாலட்சுமி கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர். 

    அப்போது மகாலட்சுமி தாலிசெயினை இறுக பிடித்துக் கொண்டார். இதனால் கொள்ளையர்களால் செயினை பறிக்க முடியவில்லை. ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.   இதுகுறித்த புகாரி ன்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கண்ட 2 நகை பறிப்பு சம்பவங்களில் ஒரேகும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது இதனால் பெண்கள் வெளியில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர்.

     எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி நகைபறிப்பு கும்பலை கைதுசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகரில் மாதிரி கைத்தறி கண்காட்சியை கலெக்டர் மேகநாதரெட்டி திறந்து வைத்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தில், கைத்தறித்துறை மூலம்  விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் கைத்தறி தொழிலின் பெருமையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், அமைக்கப்பட்டு இருந்த “மாதிரிகைத்தறி” கண்காட்சி, விருதுநகர் மாவட்டத்தில் நெசவாளர்களால் கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் பருத்திசேலைகள் மற்றும் செயற்கை இழைபட்டுச் சேலைகள் கண்காட்சி ஆகியவற்றை கலெக்டர்மே கநாதரெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.  

    மேலும், விருதுநகர் மாவட்டத்தில் 20 வருடத்திற்கு மேல் நெசவு தொழில் புரிந்து வரும் 70 வயதிற்கு மேற்பட்ட சிறந்த நெசவாளர்களுக்கு உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அவர்ளை கவுரவிக்கும் வகையில் 10 பேருக்கு பரிசுகளையும்  கலெக்டர் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நமது நாட்டில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக மிகவும் பெருமை பெற்ற தொழில் கைத்தறி நெசவு ஆகும்.  கைத்தறி நெசவில் தமிழகம் பெரும் பங்கு வகிக்கிறது.  விருதுநகர் மாவட்டத்திலும் கைத்தறி தொழில் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி தொழில் முக்கிய இடம் பெறுகிறது.  

    விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சுந்தரபாண்டியம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தளவாய்புரம், சேத்தூர், புனல்வேலி ஆகிய இடங்களில் கைத்தறி தொழில் இன்றும் சிறப்புற மேற் ்கொள்ளப்பட்டுவருகிறது.  அருப்புக்கோட்டை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி சேலைகள் மற்றும் செயற்கை இழைபட்டு சேலைகள் உலகப்புகழ் பெற்றவை ஆகும்.  இந்த சேலை ரகங்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.  

    மேலும் தமிழக அரசின் வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சீருடை வழங்கும் திட்டம் ஆகியவற்றுக்கான துணி ரகங்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.  

     இத்தகைய பெருமை வாய்ந்த கைத்தறி தொழிலையும், இவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நெசவாளர்களையும் பாதுகாக்கும் வண்ணம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நெசவாளர் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தி நெசவாளர்களை ஊக்குவித்து வருகின்றன. 

    அதன் அடிப்படையில் 1-5-2022 அன்று உழைப்பாளர் தினத்தினை முன்னிட்டு, உழைப்பாளர்களின் பெருமையைபோற்றும் விதமாகவும், விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் கைத்தறி தொழிலின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், “மாதிரிகைத்தறி”  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேற்படி மாதிரி கைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகைபுரியும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அனைவரும் அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை பார்வையிட்டு பயன் பெறலாம்.

    காட்சிப்படுத்தப்பட்ட கைத்தறி ரகங்களை தொடர்புடைய நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து அனைவரும் சிறப்பு தள்ளுபடி விலையில் வாங்கி பயன்பெறலாம்.  இதன் மூலம் கைத்தறிதொழிலையும், இதனை சார்ந்துள்ள கைத்தறி நெசவாளர்களையும்; வளர்ச்சி பெற உதவும் வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) ரகுநாத்,  கைத்தறி துறை  சார்ந்த அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.
    விபத்தில் கிராம உதவியாளர் பலியானார்.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள மலைபட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது35). இவர் திருவிருந்தாள்புரம் கிராம நிர்வாக அலுவலகர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். 

    நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் கோட்டூர், பாலவனநத்தம் பகுதியில் சென்ற போது, ராமராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. 

    இதில் படுகாயமடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமராஜ் காயமடைந்தார்.

    இதுபற்றிமோகன்ராஜ்  மனைவி பச்சைக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பலியான மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ராஜபாளையம் அருகே வட்டார சுகாதார திருவிழாவை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் ஊராட்சி தெற்கு தெரு இந்து நாடார் தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம்  நடந்தது.

     சிவகாசி சுகாதார பணி துணை இயக்குனர் டாக்டர் கலுசிவலிங்கம்  முன்னிலை வகித்தார்.   தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர்  குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். 
    இதில் பேசிய  தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.,  ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்திய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

    இனி அவசர சிகிச்சைக்காக மதுரை அல்லது  பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இல்லை.  நகர்ப்பகுதியிலுள்ள அரசு  மருத்துவமனைக்கு  இணை யாக ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்தி வரும் மருத்துவர் கருணா கரபிரபுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    கலைஞர் கண்ணொளி திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு கண் கண்ணாடி,   கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவப்பெட்டகம், பயனாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

    முகாமில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, பள்ளி தாளாளர் முத்துராஜ்,  வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார்,  வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் வீரபத்திரன்,      ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்,   மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பனை ஏறும் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் பக்கம் உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 28). பனையேறும் தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ்குமார், ஆனந்தன். இவர்கள் 3 பேரும் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில் கணேஷ்குமார் மற்றும் ஆனந்தனிடம் ராஜ்குமார் பணம் கடன் வாங்கியுள்ளார்.

    அந்த பணத்தை வெகு நாட்களாகியும் திருப்பி கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல்வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு ராஜ்குமார் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். கோவிலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை கணேஷ்குமார் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் வழிமறித்து உள்ளனர்.

    தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு கேட்டு இருக்கின்றனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு இடையே கைகலப்பு உருவானது.

    அப்போது கணேஷ் குமார் மற்றும் ஆனந்தன் இருவரும் அரிவாளால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் கோவிலூர் பகுதியில் வேகமாக பரவியது.

    இதையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் கொலை தொடர்பாக கணேஷ் குமார் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறிலேயே ராஜ்குமாரை, கணேஷ்குமார் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இருந்தபோதிலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவாக உள்ள கணேஷ்குமார் மற்றும் ஆனந்தனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பனை ஏறும் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிறப்பு ரெயில்களை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று ராஜபாளையம் ரெயில் பயணிகள் நலசங்கம் வலியுறுத்தி உள்ளது.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவரும், பா.ஜனதா தொழில்பிரிவு மாநில  செயலாளருமான சுகந்தம்  ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி-தாம்ப ரம்-திருநெல்வேலி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி இரு கோடைகால சிறப்பு ெரயில்களும் பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

    இந்த இரு ரயில்கள் வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.   இந்த இரு ரெயில்களையும்   தினசரி ரயில்களாக இயக்க ரயில்வே வாரியம் மற்றும் தென்னக ரயில்வே, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம்.
    மேலும் செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரயிலை தினசரி ரயில்களாக இயக்க வலியுறுத்தி உள்ளோம். 

    மேலும் 2 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டு கொரோனாவால் நிறுத்தப்பட்ட எர்ணாகுளம்-செங்கோட்டை-வேளாங்கண்ணி  மேலும் தற்போது இயக்குவதாக அறிவித்துள்ள எர்ணாகுளம்-செங்கோட்டை-நாகூர் விரைவு சிறப்பு ரயிலை  உடனடியாக இயக்கவும், வலியுறுத்தி வருகிறோம்.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை  தெரிவித்துள்ளது என்றார்.
    ×