என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் மர்மச்சாவு
வாலிபர் மர்மச்சாவு
சிவகாசி அருகே மாயமான வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (27). தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
சம்பவத்தன்று பாலமுருகன் மது குடித்து வீட்டுக்கு வந்தார் இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இதனால் பாலமுருகன் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். ஆனால் அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பாலமுருகனை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் பலனில்லை.இந்த நிலையில் கோட்டையூரில் உள்ள ஒரு கல்யாண மண்டபம் அருகே அழுகிய நிலையில் வாலிபரின் பிணம் கிடந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் கொடுத்த தகவலின்படி மனைவி தனலட்சுமி அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் இறந்து கிடந்தது பாலமுருகன் என தெரியவந்தது.
பாலமுருகன் அந்த பகுதியில் உள்ள மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






