என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைத்தறி கண்காட்சி
மாதிரி கைத்தறி கண்காட்சி
விருதுநகரில் மாதிரி கைத்தறி கண்காட்சியை கலெக்டர் மேகநாதரெட்டி திறந்து வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தில், கைத்தறித்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் கைத்தறி தொழிலின் பெருமையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், அமைக்கப்பட்டு இருந்த “மாதிரிகைத்தறி” கண்காட்சி, விருதுநகர் மாவட்டத்தில் நெசவாளர்களால் கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் பருத்திசேலைகள் மற்றும் செயற்கை இழைபட்டுச் சேலைகள் கண்காட்சி ஆகியவற்றை கலெக்டர்மே கநாதரெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் 20 வருடத்திற்கு மேல் நெசவு தொழில் புரிந்து வரும் 70 வயதிற்கு மேற்பட்ட சிறந்த நெசவாளர்களுக்கு உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அவர்ளை கவுரவிக்கும் வகையில் 10 பேருக்கு பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நமது நாட்டில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக மிகவும் பெருமை பெற்ற தொழில் கைத்தறி நெசவு ஆகும். கைத்தறி நெசவில் தமிழகம் பெரும் பங்கு வகிக்கிறது. விருதுநகர் மாவட்டத்திலும் கைத்தறி தொழில் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி தொழில் முக்கிய இடம் பெறுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சுந்தரபாண்டியம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தளவாய்புரம், சேத்தூர், புனல்வேலி ஆகிய இடங்களில் கைத்தறி தொழில் இன்றும் சிறப்புற மேற் ்கொள்ளப்பட்டுவருகிறது. அருப்புக்கோட்டை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி சேலைகள் மற்றும் செயற்கை இழைபட்டு சேலைகள் உலகப்புகழ் பெற்றவை ஆகும். இந்த சேலை ரகங்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசின் வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சீருடை வழங்கும் திட்டம் ஆகியவற்றுக்கான துணி ரகங்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த கைத்தறி தொழிலையும், இவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நெசவாளர்களையும் பாதுகாக்கும் வண்ணம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நெசவாளர் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தி நெசவாளர்களை ஊக்குவித்து வருகின்றன.
அதன் அடிப்படையில் 1-5-2022 அன்று உழைப்பாளர் தினத்தினை முன்னிட்டு, உழைப்பாளர்களின் பெருமையைபோற்றும் விதமாகவும், விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் கைத்தறி தொழிலின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், “மாதிரிகைத்தறி” திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாதிரி கைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகைபுரியும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அனைவரும் அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை பார்வையிட்டு பயன் பெறலாம்.
காட்சிப்படுத்தப்பட்ட கைத்தறி ரகங்களை தொடர்புடைய நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து அனைவரும் சிறப்பு தள்ளுபடி விலையில் வாங்கி பயன்பெறலாம். இதன் மூலம் கைத்தறிதொழிலையும், இதனை சார்ந்துள்ள கைத்தறி நெசவாளர்களையும்; வளர்ச்சி பெற உதவும் வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) ரகுநாத், கைத்தறி துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






