search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைத்தறி கண்காட்சி"

    • கூட்டமாக நின்ற பெண்களில் 7 பேர் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடியது தெரிய வந்தது.
    • திருடிய சேலைகளை திருட்டு கும்பலின் ஒரு பிரிவினர் தபாலில் அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில் ரூ. 72 லட்சம் மதிப்பிலான 10 பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தனர். அப்போது பெண்கள் சிலர் கூட்டமாக நின்றுகொண்டு துணி எடுப்பதுபோல நடித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கேமரா காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்தனர். இதில் கூட்டமாக நின்ற பெண்களில் 7 பேர் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் யார் என்று விசாரணை நடத்தியதில் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து திருடிய சேலைகளை திருட்டு கும்பலின் ஒரு பிரிவினர் தபாலில் அனுப்பி வைத்தனர்.

    இந்த கும்பல் தீபாவளி நேரத்தில் மீண்டும் கைவரிசை காட்ட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

    • கண்காட்சி தொடக்க விழாவிற்கு நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குநர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார்.
    • கண்காட்சியில் பொருட்கள் தள்ளுபடியில் குறைந்த விலைக்கு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பில் காதி மகோற்சவம் என்ற பெயரில் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சி காஞ்சிபுரம், பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதனை எழிலரசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கண்காட்சி தொடக்க விழாவிற்கு நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குநர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார். கைத்தறி அலு வலர் எம்.நாகராஜன், தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழக உதவி மேலாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காண்காட்சியில் கடலூர், கரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆரணி, பரமக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கைத்தறி நெசவாளர்கள் தங்களது பொருட்களை அரங்குகளில் வைத்திருந்தனர். கைவினைப் பொருட்கள், பட்டுச் சேலைகள், கதர்வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள், மூலிகை மற்றும் பாரம்பரிய அரிசியில் மதிப்புக்கூட்டி செய்யப்பட்ட பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தனர். இந்த கைத்தறி கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறஉள்ளது. இது குறித்து சேவைமைய உதவி இயக்குநர் ஆர்.சசிகலா கூறும்போது, இந்தியா முழுவதும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் கண்காட்சி நடைபெறுகிறது.தமிழகத்தில் திருச்செங்கோடு, காஞ்சி புரம், திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் பொருட்கள் தள்ளுபடியில் குறைந்த விலைக்கு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளன என்றார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
    • 12 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்திற்கு கடன் தொகை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கைத்த றித்துறை மற்றும் நெசவாளர் சேவை மையம் சார்பில் 9-வது தேசிய கைத்தறி தின விழா நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

    தேசிய கைத்தறி தின விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சியும் நடத்தப்பட்டது. அகஸ்தீஸ்வரம் கைத்தறி குழுமம் மூலம் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜவுளி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

    கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    பின்னர் நெசவாளர் நலவாழ்வு திட்டங்களான முத்ரா திட்டத்தின் கீழ் 12 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்திற்கு கடன் தொகையும், 10 நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அனுமதி ஆணைகளும் வழங்கப்பட்டது. 10 திறன்மிகு நெசவாளர்களும், 5 மூத்த நெசவாளர்களும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    மேலும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் 36 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் ஹிராலால் மற்றும் கைத்தறி துறை உதவி இயக்குனர் வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இந்திய திருநாட்டில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நெசவுத் தொழில் ஆகும்.
    • ஆகஸ்ட் 7ம் நாள் ”தேசிய கைத்தறி தினம்” சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சியினை கலெக்டர் வினீத் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது :- இந்திய திருநாட்டில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நெசவுத் தொழில் ஆகும். அத்தொழிலினை சிறப்பிக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும் இந்திய அரசினால் 2015 ம் ஆண்டு அறிவித்து ஆண்டுதோறும் கைத்தறி துறையினால் ஆகஸ்ட் 7ம் நாள் "தேசிய கைத்தறி தினம்" சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி ஆணையரால் 8-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சிகள் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், கோரா சேலைகள், காட்டன் சேலைகள், பெட்ஷீட்கள், துண்டு வகைகள், மிதியடிகள் மற்றும் பட்டு அங்கவஸ்திரங்கள் போன்ற சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. 30-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை நடைபெற உள்ளது. மேற்படி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கைத்தறி ரகங்களின் விற்பனைக்கு தமிழக அரசினால் அனுமதிக்கப்படும் 20 சதவீதம் தள்ளுபடி மான்யம் வழங்கப்படுகிறது.மேலும், 7 கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.50,000 மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, திருப்பூர் சரகத்தின் கீழ் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வயதான (60 வயதிற்கு மேற்பட்ட) நெசவாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் சிறப்பு பரிசுகள் வழங்கியும், மாநில அளவில் விருது பெற்ற சிறந்த வடிவமைப்பாளர் கோயில்வழி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் வடிவேல் , சிறந்த நெசவாளர் விருது பெற்ற சுமதி, திறன்மிகு நெசவாளர் விருது பெற்ற தந்தை பெரியார் கோயில்வழி கைத்தறி கூட்டுறவு சங்கம் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு பரிசு மற்றும் பொன்னாடைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் கே.வெற்றிவேல், கணபதிபாளையம் தந்தை பெரியார் கோயில்வழி கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் பழனிசாமி, கைத்தறி அலுவலர் பிரேமலதா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோட்டாட்சியர் இன்று தொடங்கி வைத்தார்
    • 1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி இந்திய விடுதலைப் போராட்டத்தில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி இந்திய விடுதலைப் போராட்டத்தில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை நினைவு கூறும் பொருட்டு 8-வது தேசிய கைத்தறி தினம் மாவட்ட தலைநகரங்களில் இன்று கொண்டாடப்பட்டது.

    இதனை முன்னிட்டு குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கைத்தறித் துறையின் சார்பில் இன்று நடத்தப் பட்டது.

    நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி ஆகி யோர் குத்து விளக்கேற்றி கண்காட்சியினை தொடங்கி வைத்தனர்.

    கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளா தார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்த வும்,கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெசவாள ர்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டும் , அவர்களின் பெருமையை பறைசாற்றுவதை நோக்கமாக கொண்டும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    சிறப்புக் கைத்தறி கண்காட்சியில் பெருவாரி யான அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கைத்தறி ஜவுளிகளை கொள்முதல் செய்து MY DISTRICT MY HANDLOOM என்ற hashtag -க்கினை கைத்தறி ஜவுளிகளுடன் பிரபலப்ப டுத்தவும் நெசவாளர்களை சிறப்பிக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

    ×