என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • புதிய கட்டிட திறப்பு விழா தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள ரிதம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளிக்கு ஜப்பான் நாட்டு தூதர் டாகா மயசுகி நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக தனுஷ்குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்வில் பேசிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்று த்திறன் உள்ளது. அதனைக் கண்டறிவது, வாழ்வில் முன்னேற்றமடைய செய்வது ஆசிரியர்களின் கடமை ஆகும. அதுபோல் இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளிக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் தி.மு.க.வும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் உறுதுணையாக இருப்பதாக கூறினார்.

    விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மென்பொருள் சோதனை போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • இந்த போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்விக்குழும மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் உலக அளவில் ஐ.இ.இ. சமூகம் சார்பில் அமெரிக்கா விலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறியியல் துறை நடத்திய உலக அளவிலான மென்பொருள் சோதனை (சாப்ட்வேர் டெஸ்டிங்) போட்டியில் கலந்து கொண்டு அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். உலகின் பல்வேறு பகுதிகளின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்க ழகங்களின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்விக்குழும மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர்கள் விஷ்ணுராம், பாலசுப்ரமணியன், டீன் மாரிச்சாமி, கணிப்பொ றியியல் துறைத்தலைவர் ராமதிலகம் ஆகியோர் வாழ்த்தினர்.

    இது போன்ற உலக அளவிலான போட்டிகள் மென்பொருள் துறையில் தற்போதைய ஆராய்ச்சிகளையும் அத்துறை சார்ந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள உதவுவதோடு மாணவர்கள் உலக அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்த்துக் கொள்ள ஒரு பாலமாக அமைகிறது என்று பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் கூறினார்.

    • விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • பட்டாசு ஆலைகளின் படைக்கலச்சட்ட உரிமத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான பாதுகாப்புக் குழுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை யில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டு தனது 29.10.2021-ந் தேதியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு, பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலை களை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதிகளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இனங்களில் தொடர்புடைய பட்டாசு ஆலைகளின் படைக்கலச்சட்ட உரிமத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், படைக்கலச்சட்ட உரிமங்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தினால், தொடர்ச்சியாக உற்பத்திப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததால், இந்த ஆலைகளில் பணி யாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டுவதை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் படைக்கலச்சட்ட உரிமத்தின் மீதான தற்காலிக இடைநிறுத்த ஆணைகள் விலக்கி ஆணையிடப்பட்டுள்ளது.

    மேலும், விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர் (18 வயதிற்குட்பட்ட) இருப்பினும், பட்டாசு தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பணிபுரியும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளிலேயே இரவு நேரங்களில் தொழி லாளர்கள் தங்கி இருந்தாலும் உரிமம் நிரந்தமாக ரத்து செய்யப்படும்.

    இதை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இனி வரும் காலங்களிலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை செயல்படுத்தும் வகையில் ஆய்வுக் குழுக்களின் மூலமாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடு வோர் மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.
    • விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

    நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், நகர் காங்கிரஸ் தலைவர் சங்கர்கணேஷ் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜலிங்கராஜா, பொன். சக்தி மோகன், முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன், வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், கணேசன், பேரூராட்சி தலைவர்கள் நச்சாடலிங்கம், கர்ணன், தேவதானம் பச்சையாத்தான், சிறுபான்மை பிரிவு செய்யது இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 பேரின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் கே.ெதாட்டியப்பட்டி- ராஜபாளையம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவரை விசாரித்த போது முன்னுக்கு, பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் வெங்கடேஷ்குமாரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட வெங்கடேஷ்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது ராஜபாளையத்தை சேர்ந்த சந்தனம், கோட்டை ஊரைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் அதே பகுதியில் கஞ்சாவை சட்ட விரோதமாக விற்பது தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேஷ்குமார் கொடுத்த தகவலின்படி போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 11 கிலோ கஞ்சா, கார், 2 மோட்டார் ைசக்கிள்களை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய 3 பேரின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கினர்.

    • பிளஸ்-1 தேர்வு முடிவில் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது.
    • மாணவர்கள் 92.54 சதவீதமும், மாணவிகள் 98.10 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 2-ம் பெற்றுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 23 ஆயிரத்து 357 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 22 ஆயிரத்து 292 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.54 சதவீதமும், மாணவிகள் 98.10 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 95.44 ஆகும்.

    மாநில அளவில் பெரம்பலூர் முதலிடமும், விருதுநகர் 2-ம் இடமும், மதுரை 3-ம் இடமும் பெற்றுள்ளது.

    • விருதுநகர் திருத்தங்கல், ஆவியூர், விருதுநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம், அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (28-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல், செங்கமநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடப்பட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    ஆவியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவியூர், குரண்டி, அரசகுளம், மாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், தமிழ்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருச்சுழி, தமிழ்பாடி, பச்சேரி, ஆனைக்குளம், அம்மன்பட்டி, வளையப்பட்டி, காத்தான் பட்டி, இலுப்பையூர், பனையூர், வி.கரிசல்குளம், காரேந்தல், ஜெயவிலாஸ் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது.

    அதேபோல புல்வாய்க்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புல்வாய்க்கரை, ஆவரங்குளம், அ. முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், எஸ்.நாங்கூர், பிள்ளையார்குளம், தச்சனேந்தல், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

    நரிக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உழக்குடி, இருஞ்சிறை, கட்டனூர், நாலூர், இலுப்பைக்குளம், பனைக்குடி, இனக்கனேரி, எஸ். மறைக்குளம், குறவைகுளம், பெரிய ஆலங்குளம், முடுக்கன்குளம் ஆகிய பகுதிகளிலும் நாைள மின்தடை செய்யப்படும்.

    விருதுநகர்-மதுரை ரோட்டில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை அப்பகுதியில் பழைய மின் கம்பிகளை அதிக திறன் கொண்ட மின் கம்பிகளாக மாற்றும் பணி மற்றும் மரக் கிளைகளை வெட்டும் பணி நடைபெற உள்ளது. ஆதலால் மதுரைரோடு, கச்சேரி ரோடு, லட்சுமிகாலனி, நேருஜிநகரில் சில பகுதிகள், கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், என்.ஜி.ஓ. காலனியில் முத்தமிழ் வீதி, அம்மன் வீதி, வி.வி.வி. கல்லூரி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம், அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்திற்கு தேசிய அளவில் தொழில் அமைச்சக விருதை 30-ந் தேதி கலெக்டர் பெற்றுக்கொள்கிறார்.
    • விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி அடைந்த மற்றும் முன்னேற விளையும் மாவட்டமாக தொடர்ந்து நீட்டிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து, அதில் இருந்து 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த மாவட்டங்களை முன்னேற்றும் வகையில் பாரத பிரதமரால் ஜனவரி-2018-ம் ஆண்டு முன்னேற விழையும் மாவட்டத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேற்படி 112, மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டமும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.

    இதற்கென, சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த காரணிகள் அடிப்படையாக உள்ளன.

    இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் தேசிய விருதுகள்-2022க்கான விருதுகள் பிரிவில் முதல் பரிசிற்காக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முன்னேற விளை யும் மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப் பட்டு, டெல்லியில் வருகிற 30-ந் தேதி விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இந்திய அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவ னங்களின் முதல் விருது வழங்கப்பட உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனை வோர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மாவட்ட தொழில் மையம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி மையம் மூலம் செயல்படுத்த படும் திட்டங்களை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி அடைந்த மற்றும் முன்னேற விளையும் மாவட்டமாக தொடர்ந்து நீட்டிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிநீர் பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
    • பெண்கள் ஒரு குடம் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஊராட்சிக்குட்பட்ட மாதாநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பெண்கள் ஒரு குடம் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதை கண்டித்தும், குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய கோரியும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் அப்பகுதி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் இக்ன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மல்லாங்கிணறு பேரூராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மக்கும்குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், துணைத்தலைவர் மிக்கேலம்மாள் தலைமை தாங்கினர்.

    செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். என்.சி.சி. மாணவ, மாணவிகள் சைக்கிள் பேரணியுடன், பேரூராட்சி சுகாதார பணியாளர்களும் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    விருதுநகர் -காரியாபட்டி மெயின்ரோட்டில் ஓட்டு மொத்த சுகாதார இயக்கம் சார்பில் தூய்மை பணியில் குப்பைகள் அகற்றப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் பேருராட்சி கவுன்சிலர்கள் போஸ் என்ற ஜெயசந்திரன், கருப்பையா, சுமதி சந்திரன், பாலசந்திரன், வைஷ்ணவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து வரத்துக்கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
    • ஆண்டு கடன் திட்டமான ரூ.6060.71 கோடியில் விவசாயத்திற்காக ரூ.2765.27 கோடி 45.63 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22-ன் கீழ் தொடர்புடைய துறைகளின் மூலம் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டப்பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்திற்கான ஆண்டு கடன் திட்டமான ரூ.6060.71 கோடியில் விவசாயத்திற்காக ரூ.2765.27 கோடி 45.63 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த அகில உலக இயற்கை வேளாண்மை குறித்த நடைபெற்ற உலக அளவிலான கண்காட்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு 2-ம் பரிசை பெற்ற விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கும், வேளாண்மை துறை அலுவலர்களுக்கும் பாராட்டுக்கள்.

    இதே போன்று வேளாண் விற்பனை துறை மற்றும் வணிகத்துறையின் சார்பில் டெல்லியில் நடந்த ஆகார் விழாவில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்ட கவுசிகா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கலந்து கொண்டதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் அட்டை பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டு வருகின்றது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் 2-ம் போக சாகுபடிக்கு 10 இடங்களில் தொடங்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டங்களில் நடைபெறும் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாது கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆனிமாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடந்தது.
    • சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு இன்று ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டுக்கு முன்பு குவிந்தனர்.

    காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர்.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

    பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி அருளைப் பெற்றனர்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×